கூலியாக நான் பட்ட அவமானம்!.. அப்படி அழுதேன்.. மேடையில் உடைந்து பேசிய ரஜினி..

by Murugan |
coolie
X

Coolie audio launch: கூலி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா,சௌபின் சாஹிர், அமிர்கான், லோகேஷ் கனகராஜ், கலாநிதி மாறன்,அனிருத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஜினி என்ன பேசப் போகிறார் என்கிற ஆர்வமும், எதிர்பார்ப்பும் எல்லோரிடமும் இருந்தது. இந்த விழாவில் ரஜினி சுமார் 45 நிமிடங்கள் பேசினார். அவர் பேசியதில் முக்கியமான சிலவற்றை பார்போம்:

லோகேஷ் கனகராஜைப் பற்றி பேசிய ரஜினி ‘லோகேஷ் நிறைய பேட்டிகளை கொடுத்தார். ஒரு இடத்தில் இரண்டு மணி நேரம் பேட்டி கொடுத்தார். உட்கார்ந்து பார்த்தேன்...முடியல... படுத்துட்டு பார்த்தேன்.. முடியல.. தூங்கி எழுந்து பார்த்தேன் அப்பவும் முடியல.. மேலும் ‘என்னிடம் கூலி கதையை சொல்லும் போது தான் ஒரு கமல் ரசிகர் என்று சொன்னார். யோவ் நான் கேட்டனா? நீ யார் ரசிகர்னு கேட்டனா? அதாவது இது பன்ச் டயலாக் படமில்லை.. அறிவுப்பூர்வமான படம்னு மறைமுகமா சொல்றாராம் என கலாய்த்தார்.


சத்யராஜை பற்றி பேசிய போது ‘எனக்கும் சத்யராஜுக்கும் கருத்தியல் ரீதியாக வேறுபாடு இருக்கலாம். ஆனால் அவர் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். மனதில் பட்டதை பேசுபவர்களை நம்பலாம். ஆனா உள்ளேயே வைத்து கொண்டிருப்பவர்களை நம்ப முடியாது என பேசினார்.

நாகார்ஜுனா பற்றி பேசிய போது ‘என்னா கலர்.. என்னா முடி.. நமக்கெல்லாம் முடி கொட்டிப்போச்சி.. உங்கள் ரகசியம் என்ன என அவரிடம் கேட்டேன். ‘சீக்ரெட் ஒன்றுமில்லை.. உடற்பயிற்சி மட்டும்தான் என சொன்னார். மங்காத்தா படத்தில் வெங்கட்பிரபு அஜித்துக்கு ‘எவ்வளவு நாள்தான் நல்லவனாவே நடிக்கிறது’ என ஒரு வசனம் எழுதியிருப்பார். அதுமாதிரி நாகார்ஜுனா கூலி படத்தில் ஒரு கேரக்டர் பண்ணியிருக்கிறார்’ என பேசினார்.


நான் கூலியாக வேலை செய்த காலத்தில் நிறைய திட்டு வாங்கியிருக்கிறேன். ஒரு நாள் டெம்போவில் லக்கேஜ் ஏற்ற சொல்லி ஒருவர் 2 ரூபாய் கொடுத்தார். அவரின் குரல் எங்கேயோ கேட்டது போல் இருந்ததால் திரும்பி பார்த்தேன். அவர் என் கல்லூரி நண்பர். அவரை நான் நிறைய கிண்டல் செய்திருக்கிறேன். என்னை பார்த்து ‘என்ன ஆட்டம் ஆடினடா’ என சொல்லிவிட்டு போனார். வாழ்கையில் முதன்முறையாக நான் உடைந்து அழுத தருணம் அது’ என பேசினார் ரஜினி.

Next Story