Thalaivar173: ரஜினியுடன் இணையும் புது படம்!.. போட்டோ போட்டு அப்டேட் கொடுத்த கமல்!...
40 வருடங்களுக்கு மேல் ரஜினியின் கமலும் இணைந்து நடிக்கவில்லை. சினிமா ரசிகர்கள் பலமுறை எதிர்பார்த்தும் அது நடக்கவில்லை. ரஜினியும் கமலும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது பல சினிமா ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. ஆனால் என்ன காரணமோ கடந்த 40 வருடங்களாகவே ரஜினியும், கமலும் அதில் ஆர்வம் காட்டவில்லை அல்லது அது கூடி வரவில்லை.
அதேநேரம், கூலி படத்திற்கு பின் ரஜினியும் கமலும் ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள், அதை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் எனவும் செய்தி வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது. அதோடு அந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் ‘இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை’ என ரஜினி சொன்னதால் இந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.
அதன்பின் நெல்சன் பெயர் அடிபட்டது. அதோடு ரஜினியும், கமலும் இணைந்து நடிக்கும் படத்திற்கு முன் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு ரஜினி ஒரு படத்தில் நடிக்கப்போகிறார், அதை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது என்கிற செய்தியும் வெளியானது.
கமல் தயாரித்து நடித்த தக் லைப் படம் அவருக்கு 170 கோடிக்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் நண்பர் என்கிற முறையில் ரஜினி அவருக்கு இரண்டு படங்கள் நடித்துக் கொடுக்க முடிவெடுத்திருப்பதாக சொல்லப்பட்டது. மேலும், இது தொடர்பான அறிவிப்பு கமலின் பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி வெளியாகும் எனவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த செய்தியை உறுதி செய்திருக்கிறது. ரஜினி நடிக்க சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். இது சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இத் ரஜினியின் 173வது திரைப்படமாகும்.