சம்பளமே பேசாமல் கூலி படத்தில் நடித்த ரஜினி!.. ஆனாலும் இப்ப வச்சாரு ஒரு செக்!.

coolie
Coolie: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் வருகிற 14ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் தியேடர்களில் ரிலீசாகவுள்ளது. லோகேஷும் ரஜினியும் இணைந்திருப்பதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேர்பை பெற்றது. அதேபோல் கூலி ஆடியோ லான்ச்சில் ரஜினி பேசியதும் படத்திற்கு நல்ல புரமோஷனாக அமைந்தது. இப்படத்தில் ரஜினியின் சம்பளம் பற்றி பல்வேறு செய்திகள் உலா வருகிறது. 150 கோடி எனவும் 200 கோடி எனவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் ரஜினியின் சம்பளம் பற்றிய உண்மையான தகவல் வெளியே கசிந்துள்ளது.

இந்த படத்திற்காக ரஜினி எந்த சம்பளமும் பேசவில்லை. தன்னுடைய மார்கெட் சம்பளத்தை கலாநிதி மாறன் கொடுத்துவிடுவார் என்கிற நம்பிக்கையால் 25 கோடியை அட்வான்ஸாக வாங்கிக்கொண்டு ரஜினி நடிக்க துவங்கிவிட்டார். ரஜினியின் தற்போதைய சம்பளம் 150 கோடி. ஆனால் கூலி படம் ரிலீசுக்கு முன்பே 500 கோடி வியாபாரத்தை தாண்டியது. ரிலீசுக்கு பின் எப்படியும் இப்படம் 1000 கோடி வசூலைத்தாண்டும் என கணிக்கப்படுகிறது.
இதையெல்லாம் கணக்கு போட்ட ரஜினி தனக்கு 200 கோடி சம்பளமாக கொடுக்கமுடியுமா என கலாநிதி மாறானிடம் கேட்டிருக்கிறாராம். அனேகமாக ரஜினி கேட்கும் சம்பளத்தை கலாநிதி மாறன் கொடுத்துவிடுவார் என்றே நம்பப்படுகிறது. ஜெயிலர் சூப்பர் ஹிட் அடித்தபோது பேசிய சம்பளத்தை விட 30 கோடியை அன்பளிப்பாக ரஜினிக்கு கலாநிதிமாறன் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.