Rajini Vs Vijay: தம்பி வரலாம்!. விஜய் வரக்கூடாதா?.. ரஜினியின் அண்ணனுக்கு ஏன் இந்த வன்மம்?...
Vijay Tvk: நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இருக்கிறது. அதை துவங்கி வைத்தவர் அவர்தான். அவருக்கு பின் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வந்தார். காங்கிரஸ் கட்சியின் மீது ஆர்வமாக இருந்த சிவாஜியிம் கட்சி துவங்கினார். ஆனால், தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.
அவர்களுக்கு பின் டி.ராஜேந்தர், பாக்கியராஜ், சரத்குமார் ஆகியோர் கட்சி துவங்கினார். நடிகர் கார்த்தி ஏற்கனவே இருந்த ஒரு கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆனால், யாராலும் தேர்தலில் வெற்றியை பெறமுடியவில்லை. இதில், சரத்குமார் மட்டும் ஒரே ஒருமுறை எம்.பி.யாக இருந்தார்.
ஒருபக்கம், நடிகர் ரஜினி தனது திரைப்படங்களில் மறைமுகமாக அரசியல் பேசி வந்தார். ‘நான் எப்ப வருவேன்னு யாருக்கும் தெரியாது.. ஆனா வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வருவேன்’ என பேசி அவரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். பாபா உள்ளிட்ட அவரின் பல படங்களிலும் அரசியல்ரீதியான வசனங்களை பேசினார்.
எனவே, தலைவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் நம்பி காத்திருந்தார்கள். 25 வருடங்கள் போக்கு காட்டிக்கொண்டிருந்த ரஜினி ஒரு நாள் ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி.. ஆனால், தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என அறிவித்தார். ரஜினி ரசிகர்கள் ஃபயர் விட்டார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
தனது உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என எஸ்கேப் ஆனார் ரஜினி. அவருக்கு பின் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்து மாநாட்டையும் நடத்தி முடித்து அதிர வைத்துவிட்டார். அதோடு, ஆளும் கட்சியையையும் சரமாரியாக விமர்சித்து பேசி அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டார்.
இந்நிலையில், ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா மதுரை மீனாட்ச்சி அம்மான் கோவிலிக்கு தரிசனம் செய்ய் வந்த போது விஜயின் அரசியல் வருகை பற்றி செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு ‘விஜய் வரட்டும். ஆனால், விஜயால் பெரிதாக செய்ய முடியாது. அவரால் முடியாது’ என கருத்து சொன்னார்.
இந்த விவகாரம் விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியிருக்கிறது. அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினி அவரின் அண்ணனிடம் ஆசர்வாதம் வாங்கினார். அப்போது ‘கடவுள் அருளால் என் தம்பி வெற்றி பெறுவார். ரஜினி மக்களுக்கு நல்லது செய்வார்’ என செய்தியாளர்களிடம் சொன்னவர்தான் சத்தியநாராயணா. ஆனால், விஜயை பற்றி கேட்டால் ‘கஷ்டம். அவரால் ஒன்றும் செய்ய முடியாது’ என சொல்லி இருப்பது அவரின் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது என பலரும் கூறி வருகின்றனர்.