கேம் சேஞ்சர் பார்த்தேன்!. அல்லு அர்ஜூன் காலில் விழ ஆசை!.. கொளுத்திப்போட்ட இயக்குனர்!...
Game Changer: தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அல்லு அர்ஜூன் நடிப்பில் 3 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் புஷ்பா. சுகுமார் இப்படத்தை இயக்கியிருந்தார். ஆந்திராவில் உள்ள காடுகளில் செம்மரக்கட்டையை வெட்டி கடத்தும் கும்பல் பற்றிய கதை, அதில் உள்ள தொழில் போட்டி, அரசியல் என எல்லாவற்றையும் காட்டியிருந்தார்கள்.
புஷ்பா2: முதல் பாகம் ஹிட் அடிக்கவே இரண்டாம் பாகத்தை மிகவும் அதிக செலவு செய்து எடுத்தார்கள். இந்த படத்தில் அல்லு அர்ஜூனின் மனைவியாக ராஷ்மிகா மந்தனவே நடித்திருந்தார். மேலும், முதல் பாதியில் இறுதியில் வந்த பஹத் பாசிலுக்கு இந்த படத்தில் அதிக காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தது. அதோடு, அதகளமான சண்டைக்காட்சிகளும் இப்படத்தில் ஹைலைட்டாக இருந்தது.
புஷ்பா 2 வசூல்: இந்த படம் உலக அளவில் 1800 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது. அதேநேரம், இந்த படத்தின் சிறப்பு காட்சி ஹைதராபாத்தில் திரையிட்டபோது அல்லு அர்ஜூன் அங்கே போக, அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒரு பெண் சிக்கி உயிரிழந்தார். இதனால், தெலுங்கானா போலீஸ் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் வைத்தார்கள்.
அடுத்தநாள் காலை ஜாமினில் அவர் வெளிவந்தார். இதுவும் இப்படத்திற்கு பெரிய புரமோஷனாக அமைந்துவிட்டது. அதோடு, இறந்துபோன பெண்ணின் மகனும் அந்த அந்த கூட்ட நெரிசலில் சிக்கி இப்போது வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த காரணத்தால் புஷ்பா 2 வெற்றி விழா கொண்டாடப்படவில்லை.
கேம் சேஞ்சர் வசூல்: இதற்கிடையில், ஷங்கரின் இயக்கத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து உருவான கேம் சேஞ்சர் படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 10ம் தேதி ஆந்திராவில் வெளியானது. சுமார் 450 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் 120 கோடியை மட்டுமே வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்திருக்கிறது.
இந்நிலையில், தெலுங்கு நடிகர்கள் பற்றி எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவிக்கும் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா ‘புஷ்பா 2 எனக்கு பிடித்திருந்தது. இப்போது கேம் சேஞ்சரை பார்த்தபிறகு அல்லு அர்ஜூன் மற்றும் சுகுமாரின் காலில் விழ விரும்புகிறேன்’ என சொல்லியிருக்கிறார். அதாவது, கேம் சேஞ்சர் எவ்வளவு மொக்கையான படம் என மறைமுகமாக சொல்லி நக்கலடித்திருக்கிறார்.