அதீத சர்ப்ரைஸு குயினுக்கு அடித்தது ஜாக்பாட்!.. ரவி தேஜாவுக்கே ஜோடியா நடிக்கிறாராம்!..

சமீபத்தில் ராபின்ஹுட் படத்தில் இடம்பெற்றிருந்த அதீத சர்ப்ரைசு ஐட்டம் பாடலில் பாவாடையை இழுத்து இழுத்து ஆடி மிக பிரபலமான நடிகை கெத்திகா ஷர்மாவுக்கு அதிக பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெத்திகா ஷர்மா படிப்பை முடித்த பிறகு மாடலிங் துறையில் நுழைந்தார். பின்னர், சமூக வலைதளங்களில் அவர் கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்வதன் மூலம் பிரபலமானார், இது அவருக்கு சினிமாவில் வாய்ப்புகளைப் பெற உதவியது. 2021ஆம் ஆண்டு பூரி ஜகன்னாத் தயாரிப்பில் வெளியான ரொமாண்டிக் திரைப்படத்தில் அகாஷ் பூரி உடன் இணைந்து நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் அவரது நடிப்பும் கவர்ச்சியான காட்சிகளும் தெலுங்கு சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. அதை தொடர்ந்து லக்ஷ்யா, ரங்க ரங்க வைபவங்கா, ப்ரோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் நித்தின் மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் வெளியான ராபின்ஹுட் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான அதீத சர்ப்ரைஸ் பாடலில் பாவாடையை இழுத்து கவர்ச்சியாக ஆடிய கெத்திகா ஷர்மா பல இளைஞர்களின் தூக்கத்தை மட்டுமல்ல பிரபல நடிகர்களின் தூக்கத்தையும் கெடுத்துள்ளார். ராபின்ஹுட் படம் வணிக ரீதியாக தோல்வியடைந்திருந்தாலும் அதீத சர்ப்ரைஸ் பாடல் டாப் டிரெண்டிங்கில் இருந்தது. அதை தொடர்ந்து அவர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகியிருந்த சிங்கிள் திரைப்படத்தில் விஷ்ணு, இவானாவுடன் நடித்தது அவருக்கு பெரும் வெற்றியை பெற்று தந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 35 கோடி வரை வசுலை அள்ளியுள்ளது.
இந்நிலையில், கெத்திகா ஷர்மா, பிரபல தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ரவி தேஜாவுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவருக்கு பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. கெத்திகா ஷர்மாவின் அடுத்த கவர்ச்சிகரமான ஆட்டத்தை காண ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.