இந்தா புடி ஹார்ட்.. கெனிஷா போட்ட பதிவுக்கு ரவிமோகன் கொடுத்த ரொமான்டிக் ரிப்ளே

jayamravi
தமிழ் சினிமாவில் ஒரு அறியப்படும் நடிகராக இருப்பவர் ரவிமோகன். இவர் கடந்த வருடம் தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக அறிவித்திருந்தார். இதிலிருந்தே அவர் மனைவிக்கும் ரவிமோகனுக்கும் இடையே அடுத்தடுத்து பல பிரச்சினைகள் எழத் தொடங்கியது. அறிக்கைகள் மூலமாக இருவருமே மாறி மாறி சண்டை போட்டு வந்தனர். இரு மகன்கள் இருக்கும் நிலையில் இப்படி ஒரு முடிவை ரவி மோகன் எடுத்திருப்பது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை. யார் மேல் நியாயம் இருக்கிறது? யார் மேல் தவறு இருக்கிறது என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். இதற்கிடையில் ரவிமோகன் என்னை விட்டு விலகியதறகு வெளியில் இருந்து வந்த அந்த மூன்றாவது நபர்தான் காரணம் என ஆர்த்தி கூறியிருந்தார். அது பிரபல பாடகி கெனிஷாதான் என சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியது.
ஆரம்பத்தில் இருந்தே கெனிஷாவிற்கும் ரவி மோகனுக்கும் இடையே நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதை சந்தேகக் கண்ணுடன் பார்ப்பதாக ஆர்த்தி மீது ரவி மோகன் குற்றச்சாட்டை வைத்தார். எங்கு போனாலும் வீடியோ காலில் வர சொல்வது, உதவியாளரிடம் ரவி மோகன் யாருடன் இருக்கிறார் என கேட்பது என மிகவும் டார்ச்சர் செய்வதாக ரவிமோகன் ஏற்கனவே கூறியிருந்தார்.
கெனிஷா என்னுடைய தோழிதான். அவரை பற்றி தவறாக பேசவேண்டாம் என்றும் ஊடகங்களிடம் ரவிமோகன் கேட்டுக் கொண்டார். ஆனால் சமீபத்திய அறிக்கையில் அவர் என்னுடைய அழகான துணை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் ஒரு நோட்டீஸ் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார் ரவி மோகன். என்னை பற்றி அவதூறான கருத்துக்களை பதிவிட்ட ஆர்த்தி மற்றும் அவரது அம்மா இன்னும் 24 மணி நேரத்தில் அந்த கருத்துக்களை எல்லாம் நீக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
jayamravi
இந்த நிலையில் கெனிஷா தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டியிருக்கிறார். அதை பார்த்ததும் ரவிமோகன் பதிலுக்கு எனக்கும் வேண்டும் என பதிவிட்டு அருகில் ஹார்ட் சிம்பலை அனுப்பியிருக்கிறார்.