Coolie: அமீர்கான் போஸ்டர் ரிலீஸுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணமா!.. எல்லாமே காசுதான்!....
Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம்தான் கூலி. பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா, சௌபின் சாஹிர், உபேந்திரா மற்றும் அமீர்கான் ஆகியோரை இறக்கியிருக்கிறார்கள். அதற்கு காரணம் இந்திய அளவில் வசூலை அள்ளுவதுதான் இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நோக்கம்.
அதாவது ஜெயிலர் படத்திற்கு பின் கூலி படம் ஒரு பக்கா பேன் இண்டியா படமாக உருவாகியுள்ளது. ஜெயிலர் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அந்த படம் நல்ல லாபத்தை கொடுத்தது. அப்படம் 650 கோடி வரை வசூல் செய்தது. எனவே, ரஜினிக்கு 30 கோடி செக் மற்றும் ஒரு விலை உயர்ந்த காரை அன்பளிப்பாக கொடுத்தார் கலாநிதி மாறன். அதேபோல், அப்படத்தை இயக்கிய நெல்சனுக்கும் கார் ஒன்றை பரிசளித்தார்.
கூலி படம் மூலம் 1000 கோடி வசூலை தொட வேண்டும் என்கிற முடிவில் கலாநிதி மாறன் இருக்கிறார். ஏற்கனவே ரிலீஸுக்கு முன்பே இப்படம் 500 கோடி வியாபாரத்தை தொட்டுவிட்டது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடக மற்றும் வெளிநாட்டு உரிமை ஆகியவையே நல்ல விலைக்கு போயிருக்கிறது. அதிலும் ஓவர்சீஸ் என சொல்லப்படும் வெளிநாட்டு உரிமை இதுவரை இல்லாத அளவுக்கு 85 கோடி அளவுக்கு விற்பனை ஆகியுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் கூலி படம் வெளியாகவுள்ளது. எனவே தியேட்டரில் வெளியான பின் இப்படம் 1000 கோடி வசூலை பெறும் என்றே எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தில் அமீர்கான் நடிப்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உறுதி செய்து ஒரு போஸ்டரையும் வெளியிட்டார்கள்.
திடீரென அமீர்கான் பற்றிய அப்டேட்டை வெளிட்டதற்கு பின்னணியில் ஒரு காரணம் சொல்கிறார்கள். கூலி படம் வெளியாகும் ஆகஸ்டு 14ம் தேதியில் ஹிரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்துள்ள வார் 2 படம் ரிலீஸாகிறது. ஏற்கனவே இந்தியாவில் உள்ள பல ஐமேக்ஸ் தியேட்டர்களில் இப்படம் வெளியாகவுள்ளது. ஒருபக்கம், கூலி படத்தையும் ஐமேக்ஸில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவேதான் அமீர்கான் போஸ்டரை வெளியிட்டு அதில் ஐமேக்ஸ் என குறிப்பிட்டிருந்தார்கள்.
அமீர்கான் படம் வந்தால் கண்டிப்பாக வட மாநிலங்களில் சில ஐமேக்ஸ் தியேட்டர்களை கூலி படத்திற்கு ஒதுக்குவார்கள் என்பதே சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கணக்காக இருக்கிறது.