மூக்குத்தி அம்மன் 2 பூஜைக்கு போகாத ரஜினி!.. தலைவருக்கு எல்லாமே கணக்குதான்!...

by Murugan |
sundarc
X

Rajinikanth: தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக இருப்பவர் சுந்தர்.சி. தொடர் ஹிட் படங்களை கொடுப்பவர். பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் உள்ளிட்ட நடிகர்களை வைத்து அவர் இயக்கிய மதகஜராஜா படம் பொங்கல் பண்டிகையில் வெளியாகி நல்ல வசூலை பெற்றது. அதன்பின் வடிவேலுவுடன் கேங்கர்ஸ் என்கிற படத்திலும் நடித்து இயக்கி வருகிறார்.

இந்நிலையில்தான், இப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கவுள்ளார். மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்க, அதில் அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்றது.

இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. 2ம் பாகத்தையும் ஆர்.ஜே.பாலாஜியே இயக்குவதாக இருந்தது. ஆனால், தயாரிப்பாளருக்கும், அவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் இயக்குனராக சுந்தர்.சி நியமிக்கப்பட்டார். இந்த படத்திலும் நயன்தாராவே அம்மனாக நடிக்கவுள்ளார்.


இந்த படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சுந்தர்.சி, நயன்தாரா, குஷ்பு, மீனா, ரெஜினா கசந்த்ரா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மேடையில் பேசிய ஐசரி கணேஷ் இந்த படத்திற்காக நயன்தாரா ஒரு மாதமாக விரதம் இருந்துவருவதாகவும் தெரிவித்தார்.

இந்த பூஜைக்கு வருமாறு ரஜினிக்கு அழைப்பு விடுத்திருந்தார் ஐசரி கணேஷ். ஆனால், ரஜினி வரவில்லை. பொதுவாக ரஜினி மிகவும் முக்கியமான விழாவுக்கு மட்டுமே செல்வார். இப்போது அவருக்கு கூலி ஷூட்டிங் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகனும் கலந்துகொண்டார். குஷ்புவும், முருகனும் பாஜகவை சேர்ந்தவர்கள்.

எனவே, அங்கே போனால் பாஜகவோடு தன்னை இணைத்து பேசுவார்கள் என்று எண்ணியே ரஜினி வரமால் போயிருக்கலாம் என்றும் சிலர் சொல்கிறார்கள். ரஜினி ஒரு விஷயத்தை எல்லா வகையிலும் யோசித்துதான் செய்வார். எனவே, தேவையில்லாத பிரச்சனை வேண்டாம் என அவர் நினைத்திருக்கலாம் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Next Story