அஜித்த வச்சு கல்லாகட்ட நினைக்கும் ரெட் ஜெயன்ட்.. ஸ்பெஷல் ஷோவோட இத்தனை தியேட்டர்ல ரிலீஸா?..

by Ramya |   ( Updated:2025-01-22 07:49:42  )
ajith
X

Vidamuyarchi: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் திரையரங்குகளில் படம் வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக ஹச் வினோத் இயக்கத்தில் துணிவு என்கின்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களாக அஜித்தின் ஒரு திரைப்படம் கூட வெளியாகவில்லை.

துணிவு திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வந்தது. படம் ஒரு நாளில் நடக்கும் கதையை மையமாக வைத்து இயக்கி வந்ததால் படத்தை அஜர்பைஜானில் படமாக்கி வந்தார்கள். ஆனால் அங்கு ஏற்பட்ட கால சூழ்நிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து படப்பிடிப்பு தாமதமாகி வந்தது.

ஒரு வழியாக போராடி இந்த திரைப்படத்தை எடுத்து முடித்து விட்டார்கள். இதற்கு இடையில் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி அப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. இந்த திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது.


விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இரண்டு திரைப்படங்களில் ஏதாவது ஒரு திரைப்படம் இந்த வருடத்தின் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு திரைப்படங்களுமே பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாமல் அஜித் ரசிகர்களை சோகம் அடைய வைத்தது. குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.

மேலும் விடாமுயற்சி திரைப்படம் காப்பிரைட்ஸ் பிரச்சனையில் சிக்கி தவித்து வந்த நிலையில் தற்போது அவை அனைத்தும் முடிவடைந்து பிப்ரவரி 6ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகிவிட்டது. சமீபத்தில் இப்படத்தின் பாடல், டீசர், டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது.

நிச்சயம் இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் தமிழ்நாட்டு வெளியிட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கியிருக்கின்றது. பிப்ரவரி 6ம் தேதி கிட்டத்தட்ட தமிழகத்தில் மட்டும் 800 முதல் 900 திரையரங்குகளை படத்தை வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

மேலும் காலை 9 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்கள் கழித்து அஜித் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் நிச்சயம் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும். அஜித் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு படையெடுப்பார்கள் என்பதை யோசித்த ரெட் ஜெயின்ட் நிறுவனம் தமிழகத்தில் மட்டும் இவ்வளவு தியேட்டர்களை ஒதுக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story