இது என் ஜாதிக்காரன் படம்! இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே ரோபோசங்கர்?

robosankar
சின்னத்திரை தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர். அந்த நிகழ்ச்சியில் வடிவேலு பாலாஜி அமுதவாணன் ஆகியோருடன் இணைந்து அது இது எது என்ற நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு என்ற ஒரு கான்செப்டில் ரோபோ சங்கர் வந்து கலக்கி இருப்பார். அந்த நிகழ்ச்சி தான் அவரை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலப்படுத்தியது .
அதன் பிறகு தொடர்ந்து விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்களிலும் காமெடி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தார். சின்னத்திரையில் வருவதற்கு முன்பாகவே அவர் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றிருக்கிறார் .அது மட்டுமல்ல கோயில் திருவிழாக்கள் மற்ற வைபவங்கள் என இவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.
இதன் மூலம் கிடைத்த அங்கீகாரத்தால் இவருக்கு படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் ரோபோ சங்கர். குறிப்பாக விசுவாசம் படத்தில் அஜித் உடன் பட முழுக்க டிராவல் செய்து அந்த படத்தில் யாரும் மறக்க முடியாத கேரக்டராக மாறினார்.
அதைப்போல தனுசுடன் இணைந்து மாரி படத்திலும் படம் முழுக்க வந்திருப்பார். ஒரு முன்னணி காமெடி நடிகர் என்ற அந்தஸ்துக்கே ரோபோ சங்கர் சென்றார். அதன் பிறகு இடையில் அவருடைய உடல் நிலை கொஞ்சம் மோசமாக படங்களில் நடிப்பது குறைந்து போனது. ஆனால் ஏதாவது பட விழாக்கள் என்றால் அதில் கலந்துகொண்டு படத்தைப் பற்றி பேசி வருகிறார் .
இந்த நிலையில் சமீபத்தில் சொட்ட சொட்ட நனையுது என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது .அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ரோபோ சங்கர் இது என்னுடைய ஜாதிக்காரன் படம் என கூறி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார். ஆனால் அதன் பிறகு தான் ஏன் அப்படி சொன்னேன் என்பதை பற்றியும் கூறினார். என்னுடைய ஜாதிக்காரன் படம் என்று சொன்னதும் உடனே கண்டண்டு கிடைத்து விட்டதா உங்களுக்கு ?இது முழுக்க முழுக்க காமெடி படம். அதனால் தான் சொல்கிறேன் இது என்னுடைய ஜாதி படம் என்று. கே பி ஒய் நிகழ்ச்சியில் எப்படி காமெடியை பார்த்து பார்த்து ரசித்தீர்களோ அப்படித்தான் இந்த படமும் இருக்கப் போகிறது என ரோபோ சங்கர் கூறியிருக்கிறார்.