அந்த 2 படம் இல்லனா விஜய் அரசியலுக்கே வந்திருக்க முடியாது!.. போட்டு தாக்கிய இயக்குனர்!..
TVK Vijay: கோலிவுட்டில் முக்கிய மற்றும் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். ரசிகர்கள் இவரை தளபதி என அழைக்கிறார்கள். அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரால் சினிமாவுக்கு வந்தவர் இவர். துவக்கத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க படாத பாடு பட்டார். அதன்பின் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் இவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.
கில்லி வெற்றி: கில்லி திரைப்படத்தின் மெகா வெற்றி இவரை வசூல் மன்னனாக மாற்றியது. ஒருகட்டத்தில் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறியதுதான் இவரின் சாதனை. கோட் படத்திற்கு பின் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது அவரின் 69வது திரைப்படமாகும். இந்த படத்திற்கு பின் அவர் அரசியலில் தீவிரமாக களமிறங்கவும் திட்டமிட்டிருக்கிறார்.
அரசியலுக்கு வர காரணம்: விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பல வருடங்களாகவே அரசியலுக்கு வருவது பற்றி ஆலோசனை செய்து வந்தார். ஏனெனில், தன்னுடைய சில படங்கள் வெளியான நேரத்தில் அரசியல்ரீதியாக அவர் சந்தித்த நெருக்கடிகளும், பிரச்சனைகளுமே அவரை அரசியலுக்கு வரவைத்தது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை விட கோபத்தில் அரசியலுக்கு வந்தவர்தான் விஜய்.
பனையூர் அரசியல்வாதி: விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்தினார். அதில் விஜய் ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் ஆளும் திமுகவுக்கு எதிராக மிகவும் ஆக்ரோஷமாக பேசினார். ஆனால், அதன்பின் அரசியல்ரீதியாக அவரின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு உள்ளானது. மழையால் மக்கள் பாதிக்கப்பட்டபோது நேரில் போகாமல் பாதிக்கப்பட்ட சிலரை தனது பனையூர் அலுவகத்திற்கு வரவைத்து நிவாரண உதவி கொடுத்தார். இதை பலரும் கிண்டலடிக்க ‘நான் நேரில் போனால் கூட்டம் கூடிவிடும்’ என அற்புதமான விளக்கத்தை கொடுத்து ட்ரோலில் சிக்கினார்.
பாட்டுதான் காரணம்: இந்நிலையில், தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த மனிதம் என்கிற படம் தொடர்பான விழாவில் பேசிய இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் ‘சிவகாசி, திருப்பாச்சி படங்களில் இடம் பெற்ற பாடல்கள்தான் விஜயை மாஸ் ஹீரோவாக மாற்றியது. அந்த பாடல்கள் இல்லையென்றால் விஜய் அரசியலுக்கே வந்திருக்க முடியாது. விஜய் என் தம்பி மாதிரி. நான் இதை சொல்வதால் என் மீது அவர் கோபப்படமாட்டார்’ என பேசியிருக்கிறார். சிவகாசி படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.