விஷாலிடம் எதிர்பார்க்குறது இதுதான்.. சாய்தன்ஷிகா சொன்னதும் கைத்தட்டிய அரங்கம்
vishal
நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பிறகுதான் கல்யாணம் என இத்தனை வருட காலம் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்த விஷால் இன்று நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்ய போகிறேன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்தவர்தான் சாய் தன்ஷிகா. பார்க்க மாடர்னாக இருந்தாலும் பேசுவது தமிழில்தான் அதிகமாக பேசுவார்.
தமிழ் சினிமாவில் ஒரு நல்ல அந்தஸ்தை அடையக் கூடிய நடிகைதான் சாய் தன்ஷிகா. ஆனால் ஏனோ அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவர் மார்ஷல் ஆர்ட்ஸில் திறமைசாலி. 100 குழந்தைகளை வைத்து அந்த கலையையும் கற்றுக் கொடுத்து வருகிறார் சாய் தன்ஷிகா. இவரைத்தான் விஷால் திருமணம் செய்ய போகிறாராம். இருவரும் கிட்டத்தட்ட 15 வருடங்களாக நண்பர்களாக இருந்துள்ளனர்.
விஷால் பல நடிகைகளுடன் தொடர்பு படுத்தி பேசப்பட்டார். லட்சுமி மேனன், வரலட்சுமி சரத்குமார், அபிராமி என அடுத்தடுத்து அவர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார் விஷால். ஆனால் சாய் தன்ஷிகா அந்த லிஸ்ட்டில் இல்லவே இல்லை. யாருமே இவரைத்தான் திருமணம் செய்ய போகிறார் என எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் இந்த ஜோடிக்கு திரையுலகம் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
இன்று சாய் தன்ஷிகா நடிக்கும் யோகிடா பட விழாவில் விஷாலும் கலந்து கொண்டார். அப்போது சாய்தன்ஷிகா மேடையில் பேசும் போது எனக்குத் தெரிந்து எந்த ஹீரோவும் வீடு வரை வந்ததில்லை. அப்படி ஒவ்வொரு முறையும் எனக்கு பிரச்சனை வரும்போது எல்லாம் எனக்காக குரல் கொடுத்தவர் விஷால். அந்த குணம் விஷாலிடம் எனக்கு பிடித்தது. சமீபமாகத்தான் நாங்கள் பேச ஆரம்பித்தோம் .பேச ஆரம்பிக்கும் பொழுது எங்களுக்குள் ஏற்பட்டு விட்டது. அவருக்கும் தோணுச்சு. எனக்கும் தோணுச்சு. இரண்டு பேருமே மனதார அதை ஏற்றுக் கொண்டோம்.’
vishal
‘ இது திருமணத்தில் தான் முடியும் என நாங்கள் முன்னதாகவே தெரிந்து கொண்டோம். அதனால் இனி ஏன் காத்திருக்க வேண்டும் என இப்போது முடிவு செய்து இருக்கிறோம். எனக்கு ஒரே ஒரு விஷயம் தான். அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதுதான் எனக்கு தேவை. இதுதான் நான் அவரிடம் எதிர்பார்க்கிறது .நல்ல மனிதர். நல்லா இருக்க வேண்டும். அவ்வளவுதான் என சாய் தன்ஷிகா கூறினார்.’