அவர் ஜேசன் சஞ்சய்!. விஜய் பையன்னு சொல்லாதீங்க ப்ளீஸ்!.. கோபப்பட்ட நடிகர்!...

Jason sanjay : தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். இவரின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் நடித்த வேட்டையன் படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடினார். அப்போது அவரை பார்த்த எல்லோரும் பின்னாளில் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பார். விஜய் வீட்டிலிருந்து இன்னொரு ஹீரோ உருவாகி கொண்டிருக்கிறார் என நினைத்தார்கள்.
ஆனால், ஜேசன் வளர்ந்த பின்னரும் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஜேசனை சினிமாவில் நடிக்க வைக்க பல இயக்குனர்களும் முயற்சி செய்தார்கள். நேரம், பிரேமம் போன்ற படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் கூட ஜேசனை தனது இயக்கத்தில் அறிமுகம் செய்ய ஆசைப்பட்டு விஜயின் வீட்டிற்கு போய் பேசினார்.
ஆனால், எனக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை என ஜேசன் சொல்லிவிட்டார். கடந்த சில வருடங்களாகவே ஜேசன் சஞ்சன் லண்டனில் தனது அம்மாவுடன் வசித்து வருகிறார். அதோடு, அப்பா விஜயிடம் கூட அவர் பேசுவதில்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். சென்னையில் படிப்பை முடித்துவிட்டு அமெரிக்கா சென்று சினிமா இயக்கம் பற்றி படித்தார். நண்பர்களோடு இணைந்து குறும்படங்களையும் எடுத்தார் என சொல்லப்படுகிறது.
ஒரு குறும்படத்தில் ஒரு காட்சியில் நடித்தும் இருந்தார். திடீரென அவர் ஒரு புதிய படத்தை இயக்கப்போவதாகவும், லைக்கா நிறுவனம் அப்படத்தை தயாரிக்கிறது எனவும் 2 வருடங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. அப்பா விஜயின் உதவி இல்லாமலேயே ஜேசன் இயக்குனராகிவிட்டார் என பலரும் நினைத்தார்கள். அதை நிரூபிப்பது போல மகனுக்கு விஜய் வாழ்த்து கூட சொல்லவில்லை.
ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் வேலைகள் இப்போதுதான் சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது. இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். மேலும் தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், நேற்று சந்தீப் கிஷன் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.
அப்போது செய்தியாளர்கள் சிலர் ‘விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் படம் எப்போது?’ என கேட்க, சந்தீப் உடனே ‘அவரை விஜயின் மகன் என சொல்லாதீர்கள். அவர் ஜேசன் சஞ்சய்’ என திருத்தினார். மேலும், விரைவில் இப்படத்தின் வேலைகள் துவங்கும் என சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.