நாளைக்கு டிடி நெக்ஸ்ட் லெவல் படம் ரிலீஸ்... உஷாராக சந்தானம் சொன்ன விஷயம்!

By :  SANKARAN
Update: 2025-05-15 08:16 GMT

ஆர்யா தயாரிப்பில் எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கி சந்தானம் நடித்துள்ள படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்தப் படத்தில் சந்தானத்தின் ஜோடியாக கீதிகா த்வேரி நடித்துள்ளார். செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் , நிழல்கள் ரவி, கஸ்தூரி சங்கர், ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொல்லு சபா மாறன் உள்பட பலரும் நடித்துள்ளனர்.

2016ல் தில்லுக்கு துட்டுன்னு சந்தானம் ஹீரோவான படம் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2019ல் தில்லுக்கு துட்டு 2 வெளியானது. தொடர்ந்து 2023ல் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படம்; வெளியானது. அதன் வெற்றியைத் தொடர்ந்து டிடி நெக்ஸ்ட் லெவல் படம் நாளை வெளியாக உள்ளது. சுந்தர்.சி.யின் அரண்மனை படமும் 4 பாகங்களாக வெளியாகி சக்கை போடு போட்டது. அது போல சந்தானம் படமும் ஹிட் அடிக்கும் என்று தெரிகிறது.

இந்தப் படத்தில் 'கோவிந்தா கோவிந்தா' பாடல் சர்ச்சையாக இருந்தது. இந்த நிலையில் பாடல் பக்தர்களை அவமதிக்கிறது என இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்;ந்து ஆந்திர மாநில பாஜக செய்தி தொடர்பாளர் பானுபிரகாஷ் ரெட்டி பாடலுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் 100 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தநிலையில் சர்ச்சைக்குரிய பாடல் நீக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


தொடர்ந்து படத்தின் ஹீரோ சந்தானம் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதைப் பார்க்கும்போது நாளை வெளியாக உள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தை யாரும் விமர்சனம் செய்றேன்னு பொளந்து கட்டி விடக்கூடாது என்பதற்காக எச்சரிக்கையாக சொல்லி இருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. சரி. என்ன சொன்னாருன்னு பார்க்கலாமா...

ஒரு படத்தினுடைய கிரிட்டிக் அந்தப் படத்துக்கு துடுப்பு மாதிரி இருக்கணும். தடுப்பாக இருக்கக்கூடாது. நம்மளே படங்களை தடுக்கக்கூடாது. அது துடுப்பு மாதிரி கூட்டிட்டுப் போயிட்டே இருக்கணும். எந்த ஒரு விமர்சனமும் அந்தப் படத்தையும் அந்தப் படம் பண்ணவங்களையும் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அது இல்லாம, அவங்க மன அழுத்தத்துல போய் மாட்டிக்கிட்டு இதுக்கு அப்புறம் சினிமாவே வேண்டாம்னு போற விஷயமாக இருக்கக் கூடாது என்கிறார் சந்தானம். 

Tags:    

Similar News