மதகஜராஜா சூப்பர் ஹிட்!. சந்தானம் எடுத்த புது முடிவு!.. இதத்தானே நாங்க எதிர்பார்த்தோம்!...
Madhagajaraja: விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து வந்தவர் சந்தானம். குறிப்பாக ஹிட் அடித்த திரைப்படங்களை நக்கலடிக்கும் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நிறைய நடித்திருக்கிறார். இவரின் டைமிங் சென்ஸை பார்த்த சிம்பு தனது மன்மதன் படத்தில் அவரை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் நிறைய படங்களில் நடித்தார்.
சந்தானம் காமெடி: ஒருகட்டத்தில் கோலிவுட்டின் நம்பர் ஒன் காமெடி நடிகராக மாறினார். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் சந்தானத்தின் காமெடி ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் ஹீரோக்களுடன் எப்போதும் உடனிருக்கும் நண்பராக படம் முழுக்க வந்தார் சந்தானம்.
ஆனால், இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்கிற தவறான முடிவை எடுத்தார். அப்படி அவர் முடிவெடுத்த நடித்த படங்களில் தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, டிடி ரிட்டன்ஸ் ஆகிய 3 படங்கள் மட்டுமே நல்ல வசூலை பெற்றது. மற்ற படங்களெல்லாம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.
ஹீரோ சந்தானம்: ஆனாலும், ‘நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்’ என்பதில் சந்தானமும் இன்னமும் உறுதியாக இருக்கிறார். வடிவேலு முன்பு போல நிறைய படங்களில் நடிப்பதில்லை. விவேக்கும் இறந்துவிட்டார். சூரியும் ஹீரோவாக நடிக்க போய்விட்டார். இப்போது யோகிபாபுவின் காட்டில் மட்டுமே மழை. ஆனால், அவரின் கமெடிகள் ரசிகர்களை சிரிக்கவைப்பதில்லை.
மதகஜராஜா: எனவே, சந்தானம் ஹீரோவாக நடிக்க போனதிலிருந்தே தமிழ் படங்களில் காமெடி வறட்சி நிலவுகிறது. சந்தானம் மீண்டும் காமெடி நடிகராக நடிக்க வேண்டும் என பல வருடங்களாக ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள். இந்நிலையில்தான், 12 வருடங்களுக்கு முன்பு விஷாலுடன் இணைந்து சந்தானம் நடித்த மதகஜராஜா திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது.
இந்த படத்தில் காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்திற்கு பின் ‘சந்தானம் மீண்டும் காமெடி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த படம் தொடர்பான புரமோஷன் விழாவில் பேசிய சுந்தர் சியும் அந்த கோரிக்கையை வைத்தார்.
இந்நிலையில், டபுள் ஹீரோ சப்ஜெக்ட் கதைகளை தேர்ந்தெடுத்து அதில் காமெடி செய்யலாம் என்கிற முடிவை சந்தானம் எடுத்திருக்கிறாராம். எனவே, விரைவில் இது தொடர்பான அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். சந்தானத்தின் இந்த முடிவு ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறது. உதயநிதி மற்றும் ஆர்யாவுடன் இணைந்து சில படங்களில் சந்தானம் டபுள் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.