இனிமே அதை செய்யவே மாட்டேன்!.. சரவணனை அலறவிட்ட சம்பவம்..

Saravanan
பருத்திவீரன் படத்தின் மூலம் சித்தப்பு கேரக்டரால் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகர் சரவணன். ஆரம்ப கால கட்டங்களில் விஜயகாந்த் போல தோற்றத்தை கொண்டு இருந்ததால் தமிழ் சினிமா இவருக்கு குட்டி விஜயகாந்த் என்ற அடையாளத்தை கொடுத்தது. இதனால் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்தார். அதன் பிறகு ஒரு ஹீரோவா வெற்றி பெற முடியாமல் தடுமாறி வந்தார். என்னதான் விஜயகாந்த் மாதிரி இருந்தாலும் அவரைப் போல வெற்றி படங்கள் கொடுக்க முடியவில்லை.
முதல் ஐந்து படங்கள் பெரிய வெற்றி கொடுத்தாலும் அடுத்தடுத்து வந்த திரைப்படங்கள் சரவணனை அட்ரஸ் இல்லாமல் ஆக்கியது. ஒரு பேட்டியில் அவரே சொல்லி இருக்கிறார், ”நான் சினிமாவில் வெற்றி பெறாமல் போனதுக்கு காரணமே விஜயகாந்த் மாதிரி இருக்கிற என் உருவ அமைப்பு தான்” என்று. ஆரம்பத்தில் அது பாசிட்டிவாக இருந்தாலும் போகப்போக மிகப்பெரிய பின்னடைவாக சரவணனுக்கு அமைந்தது.
இந்நிலையில் தனது 40 வது வயதில் கார்த்தியுடன் பருத்திவீரன் படத்தில் சித்தப்பு கேரக்டரில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.
கிடைக்கும் வாய்ப்புகளில் தொடர்ந்து சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொண்டாலும் இன்னும் மக்கள் மனதில் நிற்பது என்னவோ பருத்தி வீரன் சித்தப்பு கேரக்டர் தான். குணச்சித்திர கதாபாத்திரத்தில் பல திரைப்படங்களில் நடித்து தற்போது சட்டமும் நீதியும் என்ற வெப் தொடரின் மூலம் மீண்டும் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த வெப் தொடர் ஜி5 யில் தற்போது வெற்றி நடை போட்டு வருகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு ஹீரோவாக தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் சரவணன். இந்நிலையில் பேட்டி ஒன்றில் ‘நீங்கள் அடுத்து எப்போதும் படம் தயாரிக்க போகிறீர்கள்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அந்தக் கேள்வியை கேட்டவுடன் ஷாக் ஆன சரவணன் தான் இனி படம் தயாரிக்கப் போவதில்லை என சொல்லி அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
நான் தயாரித்த ஒரு படத்திற்காக மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை அந்த ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது ஒரு சுடுகாடு செட்டப். வில்லன் சந்தோஷத்தில் பாட்டு பாடி ஆடிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ஹீரோ என்ட்ரி உடனே சண்டை ஆரம்பமாகிறது. இதுதான் காட்சி. இது படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது”.
”சூட்டிங் ஸ்பாட்டுக்கு அருகில்தான் என் வீடு என்பதால் நான் ஒரு 9 மணிக்கு என்னுடைய வீட்டிற்கு கிளம்பிவிட்டேன். சாப்பிட்டுவிட்டு இரவு 12 மணிக்கு செட்டிற்குள் நுழைந்தேன். எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நான் உடனே அதில் ஒருவரை கூப்பிட்டு ‘என்னப்பா ஷூட்டிங் இல்லையா? இப்படி தூங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்’ என்று கேட்டேன். ஆனால் அங்கு யாருமே எனக்கு பதில் சொல்லவில்லை.
கடைசியில் ஒருத்தர் வந்து என்னிடம் ‘இரவில் தூக்கம் வராமல் இருப்பதற்கு அனைவருக்கும் பன் பட்டர் ஜாம் கொடுப்பாங்க ஆனா ஒருத்தருக்கு மட்டும் அது இல்ல. அவர் கோச்சிட்டு போயிட்டாரு, அதனால சூட்டிங் நின்னு போச்சு’ அப்படின்னு சொன்னாரு. யாருடா அது அப்படின்னு விசாரிச்சு பார்த்தா அவர்தான் கேமரா மேன். அவருக்கு கிடைக்கலைன்னு போயிட்டாரு. அன்று ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு எவ்வளவு செலவாகும். சிறிய மேட்டருக்கு இப்படி கோச்சிட்டு போனா தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாஸ் ஆகும். அன்னைக்கு நான் முடிவு பண்ணினேன். இனிமே என் வாழ்க்கையில படமே எடுக்க கூடாது என்று” இவ்வாறு தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார் நடிகர் சரவணன்.