தமன்னாவின் போஸ்டரை பார்த்து ஷாக் ஆன சசிகுமார்! ஆனா விஷயம் வேற

இது என் படமா? தமன்னாதான் ஹீரோயினா? அட போங்கடா

By :  rohini
Update: 2024-09-20 11:33 GMT

தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வருபவர் நடிகை தமன்னா. இளசுகளின் தேவதை தமன்னாதான். இவர் க்ளாமர் இல்லாமல் நடித்த ஒரே படம் என்றால் அது அவர் தமிழில் அறிமுகமான கல்லூரி படத்தில்தான். அதன் பிறகு அவர் நடித்த அத்தனை படங்களுமே க்ளாமர் காட்டித்தான் நடித்திருப்பார் தமன்னா. நடிகைகளில் ஓவர் க்ளாமரான நடிகையும் தமன்னாதான்.

க்ளாமர் ஒருபக்கம் இருந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களின் அன்பை பெற்ற நாயகியாகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் தமன்னாவின் ஒரு போஸ்டரை பார்த்து சசிகுமார் சமீபத்தில் ஷாக் ஆன தகவல் வைரலாகி வருகின்றது. அதாவது சசிகுமார் மற்றும் லட்சுமி மேனன் இணைந்து நடித்த திரைப்படம் சுந்தரபாண்டியன். படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்றது.

அந்தப் படத்திற்கு பிறகு சசிகுமார் ஒரு தவிர்க்க முடியாத கலைஞராக இந்த சினிமாவில் வலம் வந்தார் என்று தான் சொல்லவேண்டும். அந்த நேரத்தில் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார் சசிகுமார். இந்த நிலையில் சுந்தரபாண்டியன் படத்தை தெலுங்கில் எடுக்க அதில் தமன்னாதான் நடித்திருப்பார்.

தமிழில் முழு கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட சுந்தரபாண்டியன் படத்தில் தெலுங்கு வெர்ஷனில் தமன்னா சும்மா மாடர்ன் நாயகியாக கவர்ச்சி தூக்கலாக ஒரு பாடலில் நடனமாடியிருப்பார். அந்தப் படத்தின் ஒரு போஸ்டரைத்தான் சசிகுமாரிடம் காண்பித்து இது எந்தப் படத்தின் ரீமேக் தெரியுமா என்று கேட்டார்கள். சசிகுமாருக்கு தெரியவில்லை.

அட உங்க படம்தான். சுந்தரபாண்டியன் தான் என்று சொன்னதும் சுந்தரபாண்டியனா? அதுவும் சுந்தரபாண்டியனில் தமன்னாவா? லட்சுமி மேனன் கேரக்டரா அவங்க? என்னய்யா சொல்றீங்க? சும்மா புகுந்து விளையாண்டுருக்காங்க போல என சிரிப்பை அடக்க முடியாமல் கூறினார்.

தமிழில் எந்த கவர்ச்சி நடனமோ க்ளாமரோ இருக்காது. ஆனால் தெலுங்கு வெர்ஷனில் அவர்களுக்கு ஏற்ப கொஞ்சம் க்ளாமரை சேர்த்து அந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். இருந்தாலும் மனுஷன் ரொம்பவே ஷாக் ஆகிட்டாரு.

Tags:    

Similar News