‘குற்றம்பரம்பரை’ நாவலுக்கு விடிவுக்காலம் பொறந்துருச்சு.. பக்கா பிளானிங்கில் சசிகுமார்

கடந்த மூன்று வருடங்களாக குற்றப்பரம்பரை நாவலை படமாக்க வேண்டும் என்பதைப் பற்றிய செய்திதான் வந்த வண்ணம் இருக்கின்றன.ஆனால் அதற்கு முன்பே பாரதிராஜா ,பாலா போன்ற இயக்குனர்கள் எல்லோருமே இந்த நாவலை படமாக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினார்கள். பாரதிராஜாவை பொருத்தவரைக்கும் இந்த நாவலை அவர் இயக்க வேண்டும் என பூஜை எல்லாம் போடப்பட்டது. ஆனால் அதில் அவர் பேசிய ஒரு வசனம் அப்போது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது .
அப்போது கூட பாலா குற்றப்பரம்பரை என்பது ஒரு வரலாற்று பதிவு. அதை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம் என கூறினார். இவர்களுக்கு அடுத்தபடியாக பாண்டிராஜ் கூட இந்த நாவலை இயக்குவதாக ஒரு பேச்சு வந்தது. எதற்கும் துணிந்தவன் படத்தில் கூட சூர்யா இந்த நாவலை படிப்பதாக பாண்டிராஜ் அந்த படத்தில் காட்டி இருப்பார். அதன் பிறகு அனைவருமே பிசியாக இந்த நாவலை தற்போதைக்கு கைவிட்டனர்.
இப்போது இந்த நாவல் சசிகுமாரிடம் சென்று இருக்கிறது. ஆனால் இந்த நாவல் வெறும் இரண்டரை மணி நேரத்தில் படமாக்கக்கூடிய ஒரு நாவலாக இருக்காது. அதில் இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் மக்கள் புரிந்து கொள்ள இந்த இரண்டரை மணி நேரம் போதாது. அதனால் இதை ஒரு வெப் சீரிஸாக உருவாக்க திட்டமிட்டார்கள். இதை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிப்பதாக ஒரு செய்தி வெளியானது.
கடைசியில் சசிகுமார் இந்த நாவலை இயக்குவதாக வந்திருக்கிறது. இதை அவர் netflix க்காக முதல் காபி என்ற அடிப்படையில் தான் இயக்குகிறாராம். இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி விட்டது. இந்த நாவலில் விஜய்காந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கிறார். கூடவே ராணா டகுபதி, சத்யராஜ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கான வசனங்களை இந்த நாவலை எழுதிய வேல ராமமூர்த்தியே எழுதுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது சசிகுமார் பூ பட இயக்குனர் சசி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். அது முடிந்த பிறகு செப்டம்பர் மாதத்தில் குற்றம் பரம்பரை நாவலை படமாக்கும் முயற்சியில் இறங்கப் போகிறாராம் சசிகுமார். அதன் பிறகு ஒரே மூச்சில் இதனுடைய படப்பிடிப்பை நடத்தி கூடிய சீக்கிரம் வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
பொன்னியின் செல்வன் நாவலை எப்படி மணிரத்தினம் ஒரு பெரிய படைப்பாக கொடுத்தாரோ அதேபோல குற்றப் பரம்பரை நாவலும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் இது பெரிய திரையில் பார்த்தால் நன்றாக இருக்குமே என்பது பல ரசிகர்களின் கருத்து. ஆனால் அதை அந்த அளவு எளிதாக சுருக்கி விட முடியாது என்ற காரணத்தினால்தான் வெப் தொடராக இந்த படம் உருவாகிறது என கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.