மேடைப்பேச்சுல ரசிக்க வைக்கும் ரஜினி ரகசியம்... அந்தப் பார்முலாவைப் பின்பற்றுகிறாரா?

ஜெயிலர் பட விழாவுல காக்கா, கழுகு கதை, வேட்டையன்ல கழுதை கதை. எப்போ பேசினாலும் ஒரு ஈர்ப்ப வந்துடுது. அதுதான் ரஜினியோட மேடைப் பேச்சின் ரகசியம். அது சரி. அதுக்கு என்னென்ன பார்முலாவைப் பின்பற்றுறாருன்னு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

வேட்டையன் படத்துல ரஜினி பேசிய மேடைப்பேச்சு குறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...


எனக்குத் தெரிஞ்சி ரஜினிகாந்த் மேடையில் பேசியதுலயே மிக அதிகமான நேரத்துக்கு முதல்ல பேசியது ஜெயிலர் மேடை தான். அதுக்கு முன்னாடிலாம் பார்த்தா பங்ஷன்ல 15 நிமிஷம் வரைக்கும் தான் பேசுவாரு. ஒரு குட்டிக்கதை சொல்வாரு. இது தான் ரஜினியோட ஸ்டைல். ஜெயிலர்ல தான் அதிக நேரம் ஸ்பீச் கொடுத்தாரு.

அந்தப் படத்தின் வெற்றிக்கு அந்தப் பேச்சு மிகப்பெரிய பங்களித்தது. அந்தப் படத்தின் போது என்னென்ன நடந்தது? அப்படின்னு அவர் சொன்னது அந்தப் படத்துக்கு மிகப்பெரிய ஹைப்பா இருந்தது.அதுல இருந்து அதை ஒரு சென்டிமென்டா ரஜினி எடுத்துட்டு இருப்பாருன்னு நான் நினைக்கிறேன்.

வேட்டையன் மேடையிலும் 50 நிமிஷம் வரைக்கும் பேசியிருக்காரு. எனக்குத் தெரிஞ்சி சினிமாவில அதிக நேரம் பேசியிருக்காருன்னா அது இந்த ரெண்டு ஸ்பீச்சும் தான். எத்தனை மணி நேரம் பேசினாலும் அதை ஒரு ஸ்வீட்டா எடுத்துச் செல்ற ஆற்றல் ரஜினிக்கு உண்டு.

அந்த ஒரு மணி நேரமும் ஆடியன்ஸ் எப்பவுமே சலிப்படைந்து உட்கார மாட்டாங்க. நிமிர்ந்து ஆர்வத்தோடு கேட்டபடியே தான் இருப்பாங்க. அங்கங்கே அப்படியே ஒரு பஞ்ச் வைப்பாரு. எல்லாத்தையும் தாண்டி அவருடைய மாடுலேஷன். எடுத்துச் சொல்ற விதம் ரொம்ப அருமையா இருக்கும்.

எல்லாத்துக்கும் எங்கே கேப் கொடுக்கணும். கேப் கொடுத்துட்டு எங்கே பேசணும் அப்படின்னு அழகா பேசக்கூடியவர். அதனால தான் அவருடைய மேடைப்பேச்சு இன்னிக்கும் எப்போ வீடியோவுல பார்த்தாலும் ரசிக்கும்படியா இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles
Next Story
Share it