{"vars":{"id": "76339:5011"}}

வாழ்த்து சொன்ன யோகி பாபுவுக்கு ஷாருக்கான் சொன்ன பதில பாருங்க!.. வேறலெவல்!...

வாழ்த்து சொன்ன யோகி பாபுவுக்கு ஷாருக்கான் சொன்ன பதில பாருங்க
 
ஷாருக்கான்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாருக்கான். ரொமான்ஸ் படங்களில் நடித்து உலகமெங்கும் ரசிகர்களை உண்டாக்கியவர் இவர். 90களில் இவரின் காதல் படங்களை மொழி புரியாவிட்டாலும் தமிழ்நாட்டிலும் இளசுகள் உருகி உருகி பார்த்தார்கள். குறிப்பாக தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே, தேவதாஸ், குச் குச் ஹோத்தா ஹே, தில் சே உள்ளிட்ட பல படங்கள் தமிழ் மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. இவரின் பல படங்கள் தமிழிலும் ரீமேக் செய்து வெளியானது.

ரொமான்ஸ் மட்டுமின்றி பல ஆக்‌ஷன் படங்களிலும் ஷாருக்கான் நடித்திருக்கிறார். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளியான ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் 1300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இவர் நடிப்பில் வெளியான தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே திரைப்படம் மும்பையில் உள்ள ஒரு தியேட்டரில் கடந்த 35 வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.

உலகத்தில் எந்த ஒரு நடிகரின் படமும் இப்படி ஒரே தியேட்டரில் இத்தனை வருடங்கள் ஓடியது இல்லை. இப்போதும் தினமும் காலை 11.30 மணிக்கும் இந்த காட்சி திரையிடப்படும்போது கணிசமான ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள். ஷாருக்கான் கடந்த 2ம் தேதி தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே, அவருக்கு திரையுலகை சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை சொன்னார்கள்.

பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஷாருக்கானின் பிறந்தநாளின் போது அவரின் வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் கூடிவிடுவார்கள். ஷாருக்கானும் அவ்வப்போது வெளியே வந்து அவர்களுக்கு கையசைத்து நன்றி சொல்வார். ஆனால்,  கூட்ட நெரிசல் ஏற்படும் என காவல்துறை சொல்லியதால் இந்த முறை ஷாருக்கான் ரசிகர்களை காண வெளியேவரவில்லை. அதற்கான தனது ரசிகர்களிடம் ஷாருக்கான் மன்னிப்பும் கேட்டார்.

ஒருபக்கம் நடிகர் யோகி பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் ஷாருக்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லியிருந்தார். மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து யோகி பாபு நடித்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து சொல்லியிருந்தார் யோகி பாபு. அதற்கு நன்றி கூறியுள்ள ஷாருக்கான் ‘நன்றி மைடியர் யோகி பாபு. Miss you lots' என பதிவிட்டிருக்கிறார்.