ஷகீலாவுக்கும் எனக்கும் என்ன பிரச்னை!.. மகள் மிலா எல்லாத்தையும் புட்டு புட்டு வச்சிட்டாங்க!..

ஆபாச படங்களில் நடித்து பிரபலமான ஷகீலா ஒரு கட்டத்துக்கு மேல் அந்த துறை பெரிதாக வளர்ச்சி அடையாத நிலையிலும் பல சிக்கல்களும் மற்றும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்த நிலையிலும் அப்படி நடிப்பதை நிறுத்திக்கொண்டார். விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்ட அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் மதிப்பும் கிடைத்தது.
ஷகீலா படத்தின் போஸ்டரையே பெண்கள் பார்க்காமல் கடந்து போனதும் மாதர் சங்கங்கள் அந்த போஸ்டர்களை கிழித்து வந்த காலம் எல்லாம் மாறி ஷகீலா திருநங்கையான மிலாவை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்ததை அறிந்த மக்கள் அவரை அம்மாவாகவும் அக்காவாகவும் பார்க்கத் தொடங்கி விட்டனர்.

ஷகீலாவின் வளர்ப்பு மகளாக மாறிய திருநங்கை மிலா கலாட்டா உள்ளிட்ட யூடியூப் சேனல்களில் தொகுப்பாளராக மாறி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியெல்லாம் விமர்சனம் செய்து வந்தார். பிக் பாஸ் போட்டியாளராக இவர் தான் பங்கேற்பார் என கூறப்பட்ட நிலையில், இவருக்கு பதிலாக முதல் திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து பங்கேற்றார். அதற்கு அடுத்த சீசனிலும் ஷிவின் கணேஷ் பங்கேற்றார்.
ஷகீலாவின் மகளாகவே வலம் வந்த மிலா திடீரென ஷகீலாவின் வீட்டை விட்டு வெளியேறியது பெரும் பரபரப்பை கிளப்பியது. ஷகீலா மிலாவை மிஸ் யூஸ் செய்தாரா என்கிற அளவுக்கு சர்ச்சைகள் வெடித்தன. இந்நிலையில், தனக்கும் ஷகீலாவுக்கும் எந்தவொரு சண்டையும் இல்லை. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் என்னால் அவங்க வீட்டில் இருக்க முடியவில்லை. அதன் காரணமாகத்தான் வெளியேறினேன். ஷகீலா வீட்டுக்கு போகும் போதே 10 லட்சம் பணம், 15 லட்சம் காருடன் தான் சென்றேன் என்றும் மிலா கூறியுள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் தனது தம்பி வீட்டில் 4 மாதங்கள் இருந்ததாகவும் தற்போது தனது பெற்றோர்கள் வீட்டிற்கே சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.