வெற்றி பெற்ற கணவர்... லிப் கிஸ் அடித்த ஷாலினி... அச்சோ.. வெட்கப்பட வச்சிட்டீங்களே…
Ajithkumar: நடிகர் அஜித்குமார் ரேஸிங்கில் வெற்றி பெற்று இருக்கும் நிலையில் மனைவி ஷாலினி கட்டியணைத்து முத்தம் கொடுத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமார் பெரிய இடத்தில் இருந்தாலும் அவருக்கு ரேஸிங் செய்ய வேண்டும் என்பதுதான் கனவு என ரசிகர்கள் அனைவருக்குமே தெரியுமே. இதனால் அவர் நிறைய விபத்திலும் சிக்கி இருக்கிறார்.
ஆனால் கடந்த இரண்டு வருடமாகவே மீண்டும் ரேஸிங்கில் ஆர்வம் காட்ட தொடங்கினார். கடந்த வருடம் பைக்கில் உலக சுற்றுலா சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்தே விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இதை தொடர்ந்து, ரேஸிங் டீமை உருவாக்கி தற்போது நடந்து வரும் 24ஹவர்ஸ் துபாய் ரேஸிங்கில் கலந்து கொண்டு இருக்கிறார். நேற்று தொடங்கப்பட்ட இந்த ரேஸில் அஜித்குமாரின் டீம் மூன்றாம் இடம் பிடித்து இருக்கிறது.
முதல்முறையாக அந்த வெற்றியை அஜித் தன்னுடைய டீமுடன் கொண்டாடுவதன் வீடியோ வெளியாகி ஹிட்டடித்து வருகிறது. இந்நிலையில் அஜித்குமாரின் மனைவி ஷாலினி கணவரின் வெற்றியை முத்தமிட்டு கொண்டாடி இருக்கிறார்.
தொடர்ந்து, அஜித்குமார் வரும் செப்டம்பர் வரை ரேஸிங்கில் கலந்துக்கொள்ள இருக்கிறார். அதையடுத்தே அவர் அடுத்த திரைப்படங்களை ஒப்பந்தம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.