நேஷனல் அவார்டு வாங்கியாச்சு! ‘பார்க்கிங்’ இயக்குனருக்கு சிம்பு கொடுத்த அட்வைஸ்.. அடுத்து அவர் படமாச்சே

simbu
சமீபத்தில் தேசிய விருது யார் யாருக்கு வழங்கப்படுகிறது என்ற ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத சில திருப்பங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. அயோத்தி திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தப் படத்திற்கு கிடைக்கவில்லை.
அதே போல் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் படத்திற்கும் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தப் படத்திற்கும் கிடைக்கவில்லை. ஆடு ஜீவிதம் படத்தில் பிரித்விராஜின் டோட்டல் பாடி டிரான்ஸ்பர்மேஷனை பார்க்க முடிந்தது. அதில் அவருடைய நடிப்பும் அபாரமாக இருந்தது. ஆனால் அவருக்கும் தேசிய விருது கிடைக்கவில்லை.
தமிழில் பார்க்கிங் படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. கதை ஒரு சாதாரண கதைதான். அன்றாடம் வாழ்வில் என்ன மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோமோ அதை விளக்கும் படமாகத்தான் பார்க்கிங் திரைப்படம் அமைந்தது. அதாவது வாடகை வீட்டில் குடியிருக்கும் பல பேர் எதிர்கொள்ளும் பிரச்சினை கார் பார்க் பண்ணுவதுதான்.
அதை அழகாக படத்தில் காட்டி மக்களை படத்தோடு ஒன்றி போக வைத்தார் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர் அடுத்ததாக சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்க போகிறார். தக் லைஃப் படத்திற்கு பிறகு இந்தப் படம் தான் தயாராக போகிறது என எதிர்பார்த்தனர். ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

parking
அதனால் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்பு இணையும் படம் கொஞ்சம் தாமதமாகும் என ராம்குமாரே தெரிவித்திருக்கிறார். ஆனால் சிம்பு சொன்னது எனில் ரைட்டிங்கில் பலமாக இருக்க வேண்டும் என்பதுதான். அதனால் ரைட்டிங்கில் ராம்குமார் பாலகிருஷ்ணன் தற்போது கவனம் செலுத்தி வருகிறாராம். அதுமட்டுமில்லாமல் இந்தப் படம் முழுக்க முழுக்க கல்லூரியை மையமாக வைத்து எடுக்கப் போகும் படமாகத்தான் இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். அதனால் பொழுதுபோக்கு சிறப்பம்சம் இந்தப் படத்தில் நிறையவே இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.