அவருக்கு ஒன்னும் தெரியல! இன்னும் படிக்கல!.. ஆவேசமா பேசிய விஜய்க்கு ஆப்படித்த நடிகர்!...

Vijay: தளபதி விஜய் அரசியல் பிரவேசம் குறித்து தொடர்ச்சியாக அவருக்கு ஆதரவு பதிவுகள் வந்தால் இன்னும் சில பிரபலங்களே அவர் குறித்து விமர்சிக்கும் வகையில் பேசுவது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். அவருடைய எல்லா திரைப்படங்களுமே தற்போது 500 கோடி வசூலை குறையாமல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனால் அவருடைய சம்பளம் ஒவ்வொரு படத்திற்கும் 50 கோடி விதம் உயர்த்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அவர் தன்னுடைய கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தில் 275 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருக்கும்போது அதை உதறிவிட்டு அரசியலுக்கு வந்திருப்பதாக தவெக மாநாட்டில் மிகவும் ஆவேசமாக பேசினார் விஜய்.
பொதுவாக பிரபல நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது தங்களுடைய மார்க்கெட்டை இழந்து இருக்கும்போது தான் வந்திருப்பார்கள். முன்னணி நடிகரான எம்ஜிஆருக்கு அடுத்து இப்படி தன்னுடைய திரை வாழ்க்கையில் உச்சத்தில் இருக்கும் போது வரும் நடிகர் என்றால் அது விஜய் தான்.
இது குறித்து பலரும் சிலாகித்து பேசிய போது அவரும் தன்னுடைய முதல் மாநில மாநாட்டில் இதை குறிப்பிட்ட பேசினார். அது ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வைரலானது. தற்போது அது குறித்து இயக்குநரும் நடிகருமான சிங்கம் புலி ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அவரிடம் நடிகரின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர் ‘யார் இருந்தாலும் இல்லாட்டியும் சினிமா போய்ட்டே இருக்கும். சினிமா வேற. சினிமாவை ஜெயிச்சேன்னு சொன்னவங்க இன்னும் சரியா படிக்கலை, தெரியலைனு அர்த்தம். அதை வச்சி நம்ம ஜெயிச்சிக்கலாம். ஒருத்தர் இல்லனா எந்த பிரச்னையும் இல்லை. நான் போனா இன்னொருத்தர். அவர் போனா இன்னொருத்தருன்னு போய்ட்டே இருப்பாங்க’ என்றும் பேசி இருக்கிறார்.