பிரதீப்புடன் பைக்கில் ஜாலி ரெய்ட் செய்யும் எஸ்.கே?!... வீடியோ செம வைரல்!...

Pradeep SK: கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் 3 வருடங்கள் கழித்து பிரதீப் லவ்டுவே என்கிற படத்தை இயக்கி அவரே அதில் ஹீரோவாக நடித்தார். அப்படி வெளியான அந்த படமும் சூப்பட் ஹிட் அடித்தது.
10 கோடி செலவில் எடுக்கப்பட்ட அந்த படம் 90 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் தெலுங்கிலும் ஹிட் அடித்து பிரதீப்புக்கு ஆந்திராவிலும் ஒரு மார்க்கெட் உண்டானது. லவ் டுடே ஹிட் ஆனதால் தொடர்ந்து மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடிக்க துவங்கினார் பிரதீப். அப்படி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் படம் அசத்தலான வெற்றியை பெற்றது.

தற்போது எல்.ஐ.கே, டியூட் போன்ற படங்களில் பிரதீப் நடித்து வருகிறார். இதில் எல்.ஐ.கே படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்த படம் 2026 காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது. ஒருபக்கம் அமரன் ஹிட்டுக்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
மதராஸி படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் பராசக்தி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதோடு டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி பெயரும் அடிபடுகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் பைக்கை ஓட்ட பின்னால் பிரதீப் ரங்கநாதன் அமர்ந்து கொண்டு செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இது எங்கே எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், அது சிவகார்த்திகேயன் அல்ல என சிலர் சொல்லி வருகிறார்கள். ஆனால், பார்த்தால் அவரைப்போலத்தான் இருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.