ED ரெய்டால் சிவகார்த்திகேயன், தனுஷூக்குத் தான் சிக்கல்... கயாடு லோஹர் என்ன பண்ணினாங்க?
அமலாக்கத்துறை வளையத்துக்குள் பிரபல தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சிக்கிய செய்தி தீயாகப் பரவியது. தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு படங்களுக்கு சிக்கல்னு சொன்னாங்க. ஆனா டிராகன் நடிகையையும் பற்றி சொல்றாங்களே. என்ன காரணமா இருக்கும். வாங்க பார்க்கலாம்.
ED ரெய்டுல மாட்டிக்கொண்ட முக்கியமான படம்னா அது பராசக்தி தான். தனுஷின் இட்லிகடை வந்து கிட்டத்தட்ட முடிஞ்சிப் போச்சு. அது விசாரணை வளையத்துக்குள்ள இருக்கு. அதே நேரம் சிம்பு 49 படம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. அதனால அதுக்கு பெரிய சிக்கல் இல்லை. அவரைக் கூப்பிட்டு வாங்கினீங்களான்னு கேட்கப் போறாங்க. அவரும் அதுக்குப் பதில் சொல்வாரு. அவ்ளோதான்.
ஆனால் தனுஷூம், சிவகார்த்திகேயனும் கட்டாயமாக விசாரணைக்குப் பதில் சொல்லியே ஆகணும். தனுஷ் 40 கோடி ரூபாய் வாங்கி இருக்குறதா சொல்றாங்க. அவரு முதல் பிரதி அடிப்படையில்தான் இந்தப் படத்தை எடுத்துக் கொடுக்குறாரு. 110, 120, 130 கோடின்னு சொல்றாங்க. எவ்வளவுன்னு தெரியல. இதுல பாதிப் பணத்தை வாங்கி விட்டதாகவும் மீதியை இனிதான் வாங்கணும்னு சொல்றாங்க. வாங்கின பணத்தை கருப்புல வாங்கினாரா, வெள்ளையில வாங்கினாரா அப்படிங்கற தகவலை எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு.
சிவகார்த்திகேயன் குறித்து பல தகவல்கள் வருது. என் வீட்டை இடிச்சிட்டுப் புதுசா கட்டிக் கொடுங்க. இந்தப் படத்துல நடிச்சிக் கொடுத்துடுறேன்னு சொன்னாராம். அதே போல 25 கோடி ரூபா அட்வான்ஸ் வாங்கிருக்காரு. மீதியை ரெவினியு ஷேர்ல வாங்கிக்கறேன்னு சொன்னதாகவும் ஒரு தகவல் இருக்கு.
அது என்ன உண்மை என்பதை இந்த அமலாக்கத்துறைதான் கண்டு பிடிக்கணும். கயாடு லோஹருக்கும் இந்த நிறுவனத்தைச் சார்ந்தவர் 32 லட்சமோ, 40 லட்சமோ கிப்டா கொடுத்தாங்களாம். அது இடி ரெய்டில் இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. அப்படி இருந்தால் அவங்களும் விசாரணைக்கு வரணும்னு சொல்றாங்க. வளர்ந்து வந்த நடிகை. இப்ப தான் அவங்க வாழ்க்கையே துவங்குது. டிராகன் படம் 3 வருஷம் அலைஞ்சதுக்கு அப்புறம்தான் கிடைச்சிருக்கு. மேற்கண்ட தகவலை பிரபல வலைப்பேச்சாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.