விஜய்க்கு துப்பாக்கி எப்படியோ எஸ்கே-வுக்கு அமரன் அப்படி... டாப் லெவலுக்கு போகப்போறாரு பாருங்க...!
நடிகர் விஜய்க்கு துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது போல் அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு அமையும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இந்த வருடம் தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் 3 திரைப்படங்கள் ரிலீஸ்-ஆகி இருக்கின்றது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் என்றால் அது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருக்கும் அமரன் திரைப்படம் தான். நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கின்றார்.
மேலும் கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து சோனி பிக்சர் நிறுவனமும் இப்படத்தை தயாரித்திருக்கின்றது. மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கின்றார். மேலும் அவரது மனைவியான இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க முகுந்த் வரதராஜரின் காதல் மற்றும் ராணுவ கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். இப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. காலை முதலே சமூக வலைதள பக்கங்களில் அமரன் குறித்த விமர்சனங்கள் பட்டையை கிளப்பி வருகின்றது. படத்தில் குறை என்று சொல்வதற்கு எதுவும் இல்லை ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு வலு சேர்த்துள்ளது என்று கூறி இருக்கின்றார்.
மேலும் பல ரசிகர்கள் நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜனுக்கு இந்த திரைப்படம் ஒரு சமர்ப்பணம் என்று நெகிழ்ச்சி பொங்க தங்களது விமர்சனங்களை கூறி வருகிறார்கள். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படங்களிலேயே அமரன் திரைப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நடிகர் விஜய் வளர்ந்து வரும் காலகட்டத்தில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த துப்பாக்கி திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார். அந்த திரைப்படம் நடிகர் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. அவரை தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கு ஒரு முக்கிய படமாக துப்பாக்கி இருந்தது. அதேபோல்தான் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இந்த அமரன் திரைப்படம் இருக்கும்.
இந்த திரைப்படத்தின் மூலமாக அவர் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறப் போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று சினிமா விமர்சகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தெரிவித்து வருகிறார்கள். நடிகர் விஜய் தற்போது சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு செல்லும் நேரத்தில் அவரின் இடத்தை பூர்த்தி செய்வதற்கு ஒரு நல்ல கமர்சியல் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நிரப்புவார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
மேலும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இந்த திரைப்படத்திற்கு ஒரு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் ஒரு புதிய சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.