sequelனாலே பயம்.. இருந்தாலும் அந்தப் படத்தின் செகண்ட் பார்ட்டில் நடிக்கணும்! SK சொன்ன படம்

sivakarthikeyan
சமீபத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராசி படத்தின் முதல் சிங்கிள் பாடலான சலம்பல பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் ருக்மணி வசந்த லீடு ரோலில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் அந்த சலம்பல பாடலில் சிவகார்த்திகேயனின் டான்ஸ் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறது.
சமூக வலைதளங்களில் இந்தப் பாடல் தான் இப்போது ட்ரெண்டாகி வருகின்றன. அனிருத் இசை என்றாலே அது ஒரு தனி வைப் தான். அதில் சிவகார்த்திகேயனின் நடனமும் சேர்ந்து பாடலை வேற லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் அனிருத் காம்போவில் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாகி இருக்கின்றன. அந்த வகையில் இந்தப் பாடலும் சூப்பர் ஹிட் ஆகி இருக்கின்றது.
ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் பராசக்தி திரைப்படமும் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருக்கின்றது. அந்த படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் திரைப்படம் .இது ஒரு வரலாற்று பின்னணி கதையை மையமாக வைத்து தயாராகி வருகின்றது. ஆகையால் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து மதராசி மற்றும் பராசக்தி போன்ற திரைப்படங்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ஒரு பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் ரசிகர் ஒருவர் நீங்கள் நடித்த படங்களில் எந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்ற ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன், ஏற்கனவே வெளியான ஒரு படத்தை அதன் இரண்டாம் பாகம் என எடுப்பதில் எனக்கு ஒரு பயம்.
அப்படியே எடுத்தாலும் மாவீரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஏனெனில் அது ஒரு தனித்துவமான கதை. அப்படி இருந்தால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பேன் என கூறி இருக்கிறார் சிவகார்த்திகேயன். மாவீரன் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அது ஒரு பேண்டஸி திரைப்படமாக வெளியானது. குழந்தைகளிடமும் அந்தப் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

maaveeran
அந்தப் படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்திருந்தார். 2023 ஆம் ஆண்டு வெளியான இந்த மாவீரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டு பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி பெற்றது.