சௌத்துல இந்த மூணு பேருக்குத்தான் மார்கெட்.. கார் வாங்கிக் கொடுத்த அஜித்த மறந்துட்டாரே எஸ்ஜே சூர்யா?

By :  Rohini
Update:2025-03-15 12:52 IST

தற்போது மிகவும் தேடப்படும் நடிகராக மாறி இருப்பவர் எஸ் ஜே சூர்யா. அனைத்து மொழிகளிலும் இவர் ஒரு தேடப்படும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். எந்த பெரிய நடிகரின் படங்களை எடுத்துக் கொண்டாலும் அதில் எஸ் ஜே சூர்யாவுக்கு என ஒரு கதாபாத்திரத்தை இயக்குனர்கள் விட்டு வைத்து விடுவார்கள். அப்படி தன்னுடைய நடிப்பால் அந்தப் படத்தின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு நடிப்பு அவரிடம் இருக்கிறது.

மார்க் ஆண்டனி திரைப்படம் அதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம். அதில் எஸ் ஜே சூர்யா இல்லாமல் வேறொரு நடிகர் நடித்திருந்தால் அந்த படம் இந்த அளவு ஒரு வெற்றியை பெற்று இருக்காது. விஷால் படமாக இல்லாமல் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா படமாக மாறியதுதான் அந்த படத்திற்கு கூடுதல் பிளஸ். இப்படி பல படங்கள் இவருக்காகவே ஓடி இருக்கின்றன.

வில்லனாகவும் குணசித்திர கேரக்டரிலும் நடித்து மக்கள் மத்தியில் ஒரு நீங்கா இடத்தை பிடித்து விட்டார் எஸ் ஜே சூர்யா. ஆனால் இவருடைய சினிமா வரவு எப்படி இருந்தது என இவரே ஒரு மேடையில் கூறி இருக்கிறார். முதன் முதலில் வாலி திரைப்படத்தின் மூலமாகத்தான் இயக்குனராக அறிமுகமானார் எஸ் ஜே சூர்யா. அப்போது பிஞ்ச செருப்புடனும் அழுக்கு சட்டையுடனும் தான் அஜித்தின் முன் வந்து நின்று இருக்கிறார் .

அப்போது அஜீத் இவரை அழைத்து என்னுடைய இயக்குனர் இப்படி இருக்க கூடாது என அவருடைய தோற்றத்தையே மாற்றி இருக்கிறார். கூடவே ஒரு காரையும் வாங்கி கொடுத்திருக்கிறார். இப்படித்தான் இனிமேல் இருக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார் அஜித். இதை பல மேடைகளில் எஸ் ஜே சூர்யா பேசியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு அஜித்துடன் அவர் இணையவே இல்லை.

ஆனால் பல பேரின் ஆசை அஜித் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான். ஏனெனில் விஜய் ,கமல் என இவர்களுக்கு வில்லனாக நடித்து விட்டார். அடுத்து அஜித்துக்கு வில்லனாக நடித்தால் அதனுடைய காம்போ மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்பது ரசிகர்களின் விருப்பம். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் youtube சேனல் நடத்திய விருது வழங்கும் விழாவில் எஸ்.ஜே சூர்யா விருதை வாங்க மேடைக்கு வந்தார்.

அப்போது அவரை பார்ப்பதற்காக ஜப்பானிலிருந்து ரசிகர்கள் சில பேர் வந்திருந்தனர். இவருக்கு அன்பளிப்பு பரிசுகளையும் கொடுத்தனர். அப்போது எஸ் ஜே சூர்யா தென் இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு நிறைய படங்கள் போய் அங்கு ஒரு மிகப்பெரிய மார்க்கெட் ஓபன் ஆகி இருக்கின்றது. அங்கு அவர்களிடம் உங்களுக்கு யாரெல்லாம் தெரியும் என்று கேட்டேன். முதலில் அவர்கள் சொன்னது விஜயின் பெயர். அடுத்து இரண்டாவது விஜய் சேதுபதியின் பெயர் .மூன்றாவது என்னுடைய பெயர் என கூறி அந்த மேடையில் மிகப் பெருமையாக பேசி இருந்தார்.

Tags:    

Similar News