தனுஷை ஒவர்டேக் பண்ணிட்டாரே சூரி!.. மாமன் மொத்த வசூல் இவ்வளவு கோடியா?!...

Soori: வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சூரி. இந்த படத்திற்கு பின் அவரை ரசிகர்கள் பரோட்டா சூரி என அழைத்தனர். எனவே, அதன்பின் பல படங்களிலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் சூரியை பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைய வைத்தது.
வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா புருஷனாகவும் வந்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். அப்படி காமெடியில் கலக்கி கொண்டிருந்தவரை வெற்றிமாறன் அழைத்து விடுதலை படத்தில் கதையின் நாயகனாக மாற்றினார். இந்த படத்தின் வெற்றி சூரியை ஹீரோவாக மாற்றிவிட்டது.
அதன்பின் கருடன் படத்திலும் ஹீரோவாக நடித்து ஹிட் கொடுத்தார். மேலும், விடுதலை 2 படமும் பேசப்பட்டது. எனவே, இனிமேல் சூரி காமெடியனாக நடிக்க வாய்ப்பே இல்லை என்கிற நிலை உருவானது. அடுத்து மாமன் என்கிற படத்தில் நடித்தார் சூரி. அக்காவின் மகனை தனது மகன் போல பாசமாக வளர்க்கும் மாமன் வேடத்தில் நடித்திருந்தார் சூரி.

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வஷிகா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 10 கோடி செலவில் உருவான இப்படம் 47 கோடி வரை வசூல் செய்தது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 40 கோடி வரை வசூலானது. அதேநேரம், தனுஷின் குபேரா படம் தமிழகத்தில் 20 கோடியை கூட வசூல் செய்யவில்லை. ஏனெனில், இதை ஒரு தெலுங்கு படமாகவே ரசிகர்கள் பார்த்தார்கள்.
அதேநேரம், குபேரன் படம் ஆந்திராவில் 100 கோடி வரை வசூல் செய்தது. மேலும், ஓடிடியில் வெளியான குபேரா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.