மாமன் படத்துக்குப் போட்டி சந்தானம் படம் கிடையாதாம்.... எங்கேயோ போயிட்டாரே சூரி..!

By :  SANKARAN
Published On 2025-05-19 15:24 IST   |   Updated On 2025-05-19 15:24:00 IST

கடந்த வாரம் 3 காமெடி நாயகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகி திரையுலகினரையே வியப்புக்குள்ளாக்கியது. சந்தானம் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல், சூரி நடிப்பில் மாமன், யோகிபாபு நடிப்பில் ஜோரா கையைத் தட்டுங்க. இந்த 3 படங்களில் முதல் 2 படங்களுக்கு இடையே தான் போட்டி.

மாமன் படத்தைப் பொருத்தவரை ஒரே சென்டிமென்ட் தான். தியேட்டருக்குள்ள போனா அழாம வரமாட்டீங்க. அதே மாதிரி சூரி நடிப்புல பின்னிட்டாரு. அதே மாதிரி டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தோட செகண்ட் ஆஃப் ஃபுல்லா காமெடிதான். சந்தானம் பின்னிப் பெடல் எடுக்கிறாரு. வசூல் ரீதியாக இவரது படம்தான் முன்னிலையில் இருக்கு.

ஆனால் 3வது நாள் வசூலில் சந்தானம் படத்தை விட சூரி படம் முன்னிலையில் உள்ளது. நாலரை கோடியை வசூலித்துள்ளது. அதே நேரம் சந்தானம் படம் 3.30 கோடியைத் தான் வசூல் செய்துள்ளது. அந்தவகையில் சூரியிடமே உங்க படத்துக்கு யாரு போட்டி? சந்தானம் படமான்னு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சூரி சொன்ன பதில் தான் அல்டிமேட். சந்தானம் உங்களுக்குப் போட்டியா என நிருபர் கேட்க, சூரி சொன்ன பதிலைப் பாருங்க.

எனக்கு யாரும் போட்டியே கிடையாது... எனக்கு போட்டி நான் எந்தெந்த மாதிரி படங்கள் பண்ணனும்? எப்படி அதை மக்கள்கிட்ட சேர்க்கணும் என்பதுதான். காசு கொடுத்து வர்றவங்க சந்தோஷமா போற மாதிரி என்ன மாதிரி படங்கள் நான் தேர்ந்தெடுக்கணும் என்பதுதான் என் கவனம் எல்லாம். விடுதலை ஹிட் ஆச்சு.


அடுத்தது கருடன் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்போ மாமன் படமும் மிகப்பெரிய ஒரு வெற்றி அடைந்திருக்கு. அடுத்தது மண்டாடி அதுவும் உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். மாமன் படத்துக்கு போட்டி மண்டாடி தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News