திடீரென ஐஸ்வர்யா லட்சுமி துப்பாட்டாவை உருவிய சூரி.. கொஞ்சம் கூட எதிர்பார்க்கல

soori
Actor Suri: நடிகர் சூரி கதை எழுத பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கிய திரைப்படம் தான் மாமன். இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து ராஜ்கிரண், பால சரவணன், சுவாசிகா என பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை கோலோச்சி இருந்தவர் நடிகர் சூரி .
வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலமாகத்தான் இவருடைய காமெடி பட்டிதொட்டி எங்கும் பரவ தொடங்கியது. அதிலிருந்து பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார். அந்த படத்தின் வெற்றி இவரை மென்மேலும் உயர்த்தியது .அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் சூரி. இந்த நிலையில் அவர் ஹீரோவாக நடித்து வெளியாக கூடிய திரைப்படம் மாமன்.
வரும் 16ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடைபெற்றது. அந்த விழாவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டு சூரியின் வளர்ச்சியையும் அவருடைய நடிப்பையும் பற்றி பல்வேறு வகையில் பேசினார்கள். தற்போது சூரி ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் படத்தை பிரமோட் செய்யும் வகையில் அனைத்து youtube சேனல்களுக்கும் பேட்டி கொடுத்து வருகின்றனர்.
மாமன் திரைப்படத்தை பொறுத்த வரைக்கும் இது பக்கா ஒரு குடும்ப திரைப்படம். இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் தனக்கும் இப்படித்தானே நடக்கிறது என்று உணரும் வகையில் கண்டிப்பாக படம் அமையும் என சூரி ஒவ்வொரு பேட்டியிலும் கூறி வருகிறார் .ஏனெனில் ஒவ்வொரு மனிதன் வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவத்தை பற்றி தான் இந்த படம் சொல்லப்போகிறது என சூரி கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் ஒரு ப்ரோமோஷனுக்கு சென்றபோது ஆண் தொகுப்பாளர் ஒருவர் திடீரென ஒரு ஃபேமிலி பேக் சாக்லேட் ஒன்றை ஐஸ்வர்யா லட்சுமி கையில் கொடுக்க அதை பார்த்ததும் சூரி ஐஸ்வர்யா லட்சுமி அணிந்திருந்த துப்பட்டாவை வாங்கிக் கொண்டு தன் மேல் போட்டு எனக்கும் கொடு என கேட்டார். அதாவது பெண்கள் என்றால் உடனே வந்து விடுவீர்கள் என்ற வகையில் இவருடைய செயல் இருந்தது.
soori
அதனால் தான் ஐஸ்வர்யா லட்சுமி துப்பட்டாவை தானும் போட்டுக்கொண்டு நானும் துப்பட்டா அணிந்திருக்கிறேன். எனக்கும் சாக்லேட் கொடு என்ற வகையில் அந்த மேடையில் மிகவும் கிண்டலாக பேசினார் சூரி .அந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.