அப்பாதான் நம்பல! சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் நடிக்கப் போகும் ஹீரோ

soundarya
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த். தற்போது அவருடைய நடிப்பில் கூலி திரைப்படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. அந்த படம் வரும் 14ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருக்கின்றன. ரஜினி மட்டுமல்ல அந்தப் படத்தில் பிற மொழியில் இருக்கும் உச்ச நடிகர்களும் நடித்துள்ளனர்.
குறிப்பாக நாகர்ஜுனா உபேந்திரா அமீர்கான் என தென்னிந்திய சினிமாவில் டாப் நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்திற்கு பெரிய அளவில் ஹைப் இருக்கிறது. ரஜினிகாந்தை பொருத்தவரைக்கும் 70களில் இருந்து இன்றுவரை எண்ணற்ற பல இயக்குனர்களுடன் பணி புரிந்திருக்கிறார். ஒரு இயக்குனரின் நடிகர் என்ற அளவுக்கு தான் அவருடைய பணிவும் இருக்கும்.
அதாவது இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே வெளிப்படுத்தக்கூடிய ஒரு சிறந்த நடிகராக தான் இன்றுவரை ரஜினி இருந்து வருகிறார். அவர் பணிபுரியாத இயக்குனர்களே இல்லை. இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டவர் ரஜினி. அதிலிருந்து தொடர்ந்து எஸ் பி முத்துராமன் மகேந்திரன் பாலு மகேந்திரா என தமிழ் சினிமாவில் கோலோச்சிய இயக்குனர்களுடன் பணி புரிந்திருக்கிறார்.
அது மட்டுமல்ல ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு இயக்குனர். அவருடைய இயக்கத்திலும் ரஜினி நடித்திருக்கிறார். அவருடைய இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்தும் ரஜினியை வைத்து படத்தை எடுத்திருக்கிறார். ஆனால் அவர்கள் இருவரும் ரஜினியை வைத்து எடுத்த படங்கள் எதிர்பார்த்த அளவு போகவில்லை. ஒரு கட்டத்தில் இனிமேல் மகள்களின் இயக்கத்தில் படங்களில் நடிக்க மாட்டேன் என்று ரஜினி முடிவு எடுத்ததாக ஒரு தகவல் வெளியானது.
இந்த நிலையில் ரஜினியின் இரண்டாவது மகளான சௌந்தர்யா ரஜினி காந்த் ஒரு படத்தை தயாரிக்கப் போகிறார். அந்த படத்தின் ஹீரோ வேறு யாருமில்லை. டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனர்தானாம். இந்த படத்தை இயக்கப் போவது டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் அசோசியேடிவ்வாக வேலை செய்த மகிழ். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை ஏற்கனவே யுவராஜ் மற்றும் மகேஷ் என்பவர்கள் தான் தயாரித்தார்கள் .இப்போது இந்த படத்தை தயாரிக்கப் போவது மகேஷ் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் என்று தெரிகிறது.