உழவர் திருநாளுக்கு விஜயகாந்தை பார்க்க வந்த முக்கிய ‘பிரபலங்கள்’… இப்ப தெரிதா அவர் யாருனு?
Vijayakanth: தமிழ் சினிமாவின் கேப்டன் என அழைக்கப்பட்ட மறைந்த அரசியல் தலைவர் விஜயகாந்தை பார்க்க உழவர் திருநாளிற்கு வந்திருந்த பிரபலங்கள் குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் எல்லோருமே பார்த்து ஆச்சரியப்படும் நடிகராக இருந்தவர் விஜயகாந்த். ஆக்ஷன் காட்சிகளாக இருந்தாலும் சரி எமோஷனல் காட்சிகளாக இருந்தாலும் சரி விஜயகாந்தை காண தனிக்கூட்டம் அப்போதில் இருந்து இப்போது வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது.
நடிப்பில் கல்லா கட்டி வந்த நேரத்தில் அரசியலில் குதித்தார். தேமுதிக கட்சியை உருவாக்கி அதில் தன்னுடைய முழு கவனத்தையுமே செலுத்தினார். கட்சி ஒரு பக்கம் வளர்ந்தாலும் அவரை செய்திகளில் தொடர்ந்து நெகட்டிவாக காட்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதுவே அவரின் அரசியல் பாதையை உடைத்து நோயில் படுக்க காரணமாக அமைந்தது. பல ஆண்டுகள் நோயோடு பாதிக்கப்பட்டவர். 2023ம் ஆண்டு டிசம்பரில் மறைந்தார். ஆனால் அவர் மறைந்த நாளில் தான் அவர் மீது எவ்வளவு பேர் மரியாதை வைத்து இருந்தது தெரிந்தது.
லட்சக்கணக்கில் மக்கள் வெள்ளமாக கூடினர். தொடர்ந்து பல திரை பிரபலங்கள் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இதற்கு காரணம் கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது எல்லாரையுமே சமமாக மதித்ததே என்று காரணமாக கூறப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் கிராமத்து பின்னணியை கொண்ட விஜயகாந்த் மாடு வளர்ப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் அவரிடம் அர்த்தனாரி மற்றும் வாசுகி என இரண்டு மாடுகள் இருந்தது. அதற்கு அடிக்கடி உணவு வழங்குவதும் புகைப்படமாக வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் மறைந்த அவரை காண அர்த்தனாரி மற்றும் வாசுகி உழவர் திருநாளுக்கு வந்திருக்கும் ஆச்சரிய தருணத்தை புகைப்படங்களாக வெளியிட்டு இருக்கின்றனர். விஜயகாந்தின் அன்பால் அந்த ஐந்தறிவு ஜீவன்கள் கூட ஈர்க்கப்பட்டு இருப்பதாக பலரும் பாராட்டி பேசி வருகின்றனர்.