ஆதிக்கிடம் மொத்தமா சரண்டரான அஜித்!. குட் பேட் அக்லி உருவானதன் பின்னணி!....

by Murugan |
good bad ugly
X

Good Bad Ugly: அஜித் ரசிகர்கள் அவரிடம் என்ன எதிர்பார்ப்பார்களோ அப்படி வந்திருக்கிறது என்பது குட் பேட் அக்லி என்பது டீசர் வீடியோவை பார்த்தாலே புரிகிறது. தியேட்டரில் அஜித் ரசிகர்கள் வைப் பண்ணும்படி பல கூஸ்பம்ஸ் காட்சிகள் இருக்கும் என்றே நம்பப்படுகிறது. ஏனெனில், பில்லாவுக்கு பின் மீண்டும் ஒரு பக்கா கேங்ஸ்டர் படத்தில் அஜித் நடித்திருக்கிறார்.

அதுவும் பக்கா மாஸ் மற்றும் கமர்ஷியல் படமாக குட் பேட் அக்லி உருவாகியுள்ளது. இந்த படத்தில் அஜித்துக்கு மூன்று கெட்டப்பா இல்லை மூன்று வேடமா என்பது படம் பார்க்கும்போதே தெரியவரும். பில்லா படத்தில் வருவது போன்ற தோற்றத்திலெல்லாம் அஜித்தை காட்டி செம சர்ப்பரைஸ் தந்திருக்கிறார் ஆதிக்.

அஜித்தின் எல்லா கெட்டப்புகளுமே விண்டேஜ் லுக்கில் ரசிகர்கள் ரசிக்கும்படி இருக்கிறது. அதுவும், விடாமுயற்சி அஜித்தை பார்த்து ஏமாந்துபோன அஜித் ரசிகர்களுக்கு குட் பேட் அக்லி டீசர் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கிறது. டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் யுடியூப்பில் 3.5 கோடி பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.


எனவே, ஒரு நாளில் அதிகம் பேர் பார்த்த டீசர் என்கிற சாதனையை பெற்றிருக்கிறது. இந்நிலையில், குட் பேட் அக்லி உருவானதன் பின்னணி பற்றி பார்ப்போம். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய முதல் திரைப்படம் திரிஷா இல்லனா நயன்தாரா. இந்த படத்தில் கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. எனவே, அந்த இமேஜ் ஆதிக் மீது விழுந்தது.

அடுத்து சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை எடுத்தார் ஆதிக். ஆனால், சிம்பு சரியான ஒத்துழைப்பு கொடுக்காததால் படம் அரைகுறையாக உருவாகி வெளிவந்து படுதோல்வி அடைந்தது. அதன்பின் பிரபுதேவாவை வைத்து பகீரா என்கிற படத்தை எடுத்தார் அதுவும் ஓடவில்லை.

அப்போதுதான் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் இணை இயக்குனராக வேலை செய்ததோடு, ஒரு சின்ன வேடத்திலும் நடித்தார். அப்போது அஜித்துடன் பழக்கம் ஏற்பட்டு அவர் ஒரு கதை சொல்ல ‘உன் மீது இருக்கும் இமேஜை மாற்றும்படி ஒரு படம் பண்ணிவிட்டு வா’ என அஜித் சொல்ல, விஷால், எஸ்.ஜே.சூர்யாவை வைத்து மார்க் ஆண்டனி படத்தை எடுத்தார். அந்த படம் சூப்பர் ஹிட்.

எனவே, ஆதிக் இயக்கத்தில் நடிக்க அஜித் சம்மதம் சொல்ல குட் பேட் அக்லி உருவாகியிருக்கிறது. இந்த படத்தை பொறுத்தவரை எல்லா முடிவுகளையும் ஆதிக்கிடமே விட்டுவிட்டார் அஜித். வழக்கமாக அஜித்துக்கு ‘வி’ செண்டிமெண்ட் உண்டு. அவரின் படங்கள் வீரம், வேதாளம், விவேகம், விடாமுயற்சி என படங்களின் தலைப்பு வி-யிலேயே துவங்கும். அதேபோல், அஜித்தின் பட அப்டேட் எப்போதும் வியாழக்கிமைகளில் வெளியாகும். ஆனால், குட் பேட் அக்லி டீசர் வெள்ளிக்கிழமையில் வெளியானது. இது எதிலும் அஜித் தலையிடவில்லை. அதோடு, படத்தின் கதை, காட்சி அமைப்பு, மேக்கிங் என எதிலுமே அவர் தலையிடவில்லையாம்.

எனவே, அஜித்தின் ரசிகனாக படத்தை இயக்கியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். வருகிற ஏப்ரல் 10ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

Next Story