எஸ்.கே. பக்கத்து வீட்டு பையன்!.. ஜெயம் ரவி வில்லன்!.. சுதா கொங்கரா இப்படி சொல்லிட்டாரே!...
Parasakthi: இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற படங்களை இயக்கியவர் சுதா கொங்கரா. இந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தது. இதில், சூரரைப்போற்று படம் மட்டும் ஓடிடியில் வெளியானது. அதன்பின் சூர்யாவை வைத்து புறநானூறு என்கிற படத்தை இயக்க முடிவெடுத்தார். இது 1960களில் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை.
முதலில் இப்படத்தில் நடிக்க சூர்யா ஒப்புக்கொண்டாலும் தற்போது பாலிவுட்டிலும் நுழைய முயற்சி செய்து வருகிறார். எனவே, புறநானுறு படத்தில் நடித்தால் அது சிக்கலாகும் என நினைத்த சூர்யா காட்சிகளை மாற்ற சொன்னார். ஆனால், சுதா கொங்கரா முடியாது என மறுத்துவிட படம் டிராப் ஆனது.
அதன்பின் அந்த கதையில் நடிக்க சிவகார்த்திகேயன் முன்வந்தார். எனவே, பராசக்தி என்கிற தலைப்பில் இப்படத்தை எடுத்து வருகிறார் சுதாகொங்கரா. இந்த படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடிக்கும் முதல் பீரியட் படம் இது. எனவே, மிகவும் ஆர்வமுடன் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனுக்கு இது ஒரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒரு விருது விழாவில் பேசிய சுதா கொங்கரா ‘சிவகார்த்திகேயன் பக்கத்து வீட்டு பையன் லுக் இருக்கும். அது படத்திற்கு பெரிய பிளஸ். எனக்கும் அதுதான் தேவைப்பட்டது. ஒருபக்கம் ரவி இதுவரை நடிக்காத வேடத்தில் நடித்திருக்கிறார்.
நிஜ வாழ்வில் அவர் அப்படி இருக்கிறாரோ அதற்கு நேர்மாறான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சில காட்சிகளில் நடித்துவிட்டு ‘என்னை பார்த்தால் பயமாக இருக்கிறதா?’ எனக்கேட்பார்’ என சொல்லியிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. பராசக்தி படம் 2026 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.