அட்லி சொன்ன பட்ஜெட்!.. எஸ்கேப் ஆன சன் பிக்சர்ஸ்!.. டேக் ஆப் ஆகுமா படம்?!..

by Murugan |
அட்லி சொன்ன பட்ஜெட்!.. எஸ்கேப் ஆன சன் பிக்சர்ஸ்!.. டேக் ஆப் ஆகுமா படம்?!..
X

Atlee: ஷங்கரின் சிஷ்யர்களில் முக்கியமானவர் அட்லி. குறும்படங்களை இயக்கிவிட்டு சினிமாவுக்கு வந்தார். ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தார். அப்போதுதான் விஜயுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன்பின் ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக மாறினார்.

இந்த படம் விஜய்க்கு பிடித்திருந்ததால் அட்லியின் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தார். அப்படி உருவான தெறி படம் ஹிட் அடிக்க அட்லியின் இயக்கத்தில் மெர்சல், பிகில் ஆகிய படங்களில் நடித்தார். இதனால், ஷாருக்கானின் அழைப்பு அட்லிக்கு வர பாலிவுட்டுக்கு போனார். அப்படி உருவான படம்தான் ஜவான்.


ஷாருக்கான் தயாரித்து நடித்த இந்த படம் 1300 கோடி வரை வசூல் செய்துவிட்டது. இதனால், சல்மான்கான், அல்லு அர்ஜூன் போன்ற பெரிய நடிகர்களே அட்லியின் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் நிலை ஏற்பட்டது. ஜவான் படம் உருவாகும் போதே அட்லியை வளைத்துப்போட்டர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்.

ஜவானுக்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் அட்லிக்கு சம்பளம் 55 கோடி என ஒப்பந்தம் போடப்பட்டு அட்லியும் அதில் கையெழுத்து போட்டார். ஆனால், ஜவான் படம் 1300 கோடி வரை வசூல் செய்யும் என அட்லியே எதிர்பார்க்கவில்லை. ஆனாலும், ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டதால் ஒன்றும் செய்ய முடியவில்லை.


ஆனால், இந்த படத்தின் பட்ஜெட் என ஒரு பெரிய தொகையை அட்லி சொல்ல அதிர்ந்து போய்விட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்போதும் கணக்கு போட்டுதான் செலவு செய்வார்கள். அதிலும் சன் பிக்சர்ஸ் மிகவும் யோசிப்பார்கள். எனவே, அட்லி சொன்ன பட்ஜெட்டை ஏற்காமல் இந்த படத்திலிருந்து சன் பிக்சர்ஸ் விலகிவிட்டது.

அல்லு அர்ஜுன் ஹீரோ என்பது முடிவாகவுள்ள நிலையில் இப்போது சன்பிக்சர்ஸ் விலகிவிட தில் ராஜுவை உள்ளே கொண்டு வரும் முயற்சியில் அல்லு அர்ஜூன் ஈடுபட்டிருக்கிறார். சன் பிக்சர்ஸ் அக்ரிமெண்ட் கேன்சல் ஆகிவிட்டதால் இப்போது அட்லி 100 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். ஏற்கனவே கேம் சேஞ்சர் படம் மூலம் நஷ்டமடைந்துள்ள தில் ராஜூ அட்லி படத்தை தயாரிப்பாரா என்பது தெரியவில்லை. இதுபற்றிய அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.

Next Story