அப்பாவும் இல்ல.. அம்மாவும் இல்ல! ஜேசன் சஞ்சய்க்காக சிபாரிசு செய்தது இவங்கதானாம்

By :  ROHINI
Published On 2025-05-20 19:16 IST   |   Updated On 2025-05-20 19:16:00 IST

jason

விஜய் அரசியலுக்கு போன அதே நேரம் அவருடைய மகன் சினிமாவில் என்ட்ரி ஆனார். கடந்தாண்டே அவர் ஒரு படத்தை இயக்குவதாக அறிவிக்க அந்த படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தது. இதன் மூலம் முதல் படமே பெரிய நிறுவனம் எனும் போது இந்த செய்தி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. கனடாவில் சினிமா சம்பந்தமான படிப்பை முடித்த கையோடு சென்னை வந்து ஒரு சில குறும்படங்களை இயக்கினார் ஜேசன் சஞ்சய்.

அந்த குறும்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் விஜய்க்கு அடுத்து இணையான மாஸ் வரவேற்பு ஜேசன் சஞ்சய்க்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தங்கள் நிறுவனத்தில் ஒரு படம் பண்ண போகிறார் என்று அறிவித்ததோடு அந்தப் படத்தை பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. எப்படியோ ஒரு வழியாக படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் படப்பிடிப்பு வானகரம் பகுதியில் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு அருகில் தான் மிஷ்கினின் டிரெயின் படப்பிடிப்பும் நடந்து வருகிறதாம். அதனால் அந்த பட யூனிட் டெக்னீசியன்களுக்கு ஜேசன் சஞ்சய் எப்படி டைரக்ட் செய்கிறார் என்பதை பார்க்கக் கூடிய ஒரு பாக்கியம் கிடைத்திருக்கிறது. பார்த்தவர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாம்.

ஏனெனில் எவ்ளோ பெரிய பிரபலத்தின் மகன்? அப்படி எந்தவொரு பந்தாவும் இல்லாமல் மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் படப்பிடிப்பை நடத்துகிறாராம். அப்படியே விஜயை பார்த்தாற் போல் இருந்ததாக கூறுகிறார்கள். மேலும் அவர் பேசுவதே யாருக்கும் கேட்பதில்லையாம். அந்தளவுக்கு சைலண்டாகத்தான் படப்பிடிப்பை கொண்டு போகிறாராம்.

அவர் லைக்காவுடன் ஒப்பந்தமானதும் நிச்சயமாக விஜய் சிபாரிசு பேரில்தான் ஒப்பந்தமாகியிருப்பார் என்ற செய்தியும் வெளியானது. ஆனால் விஜய் எந்த காரணம் கொண்டும் அப்படி பண்ண மாட்டார். ஒரு வேளை அவரது மனைவி லண்டனில் இருப்பதால் அவர் சொல்லி கூட லைக்காவுடன் கமிட் ஆகியிருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அது எதுவும் இல்லை. சங்கீதாவின் சகோதரிதான் ஜேசன் சஞ்சயை லைக்காவிற்கு அறிமுகம் செய்து வைத்து இவரை உங்கள் நிறுவனத்தில் அறிமுகம் செய்து வையுங்கள் என்று சொன்னதினால்தான் லைக்காவுடன் சேர்ந்ததாக கூறப்படுகிறது. 

Tags:    

Similar News