தலைக்கு மேல் தொங்கும் கத்தி!.. ஆயிரம் கோடி வசூல் இருக்கட்டும்!. ரிலீஸாகுமா கங்குவா?!..
Kanguva: இப்போதெல்லாம் ஒரு படத்தை உருவாக்குவதை விட அதை பிரச்சனை இன்றி ரிலீஸ் செய்வதே பெரிய விஷயமாக இருக்கிறது. கண்டிப்பாக எந்த தயாரிப்பாளரும் சொந்த பணத்தை போட்டு படம் எடுக்க மாட்டார்கள். படத்தை உருவாக்க என்ன பட்ஜெட் தேவையோ அந்த பணத்தை ஃபைனான்சியரிடமிருந்து வாங்குவார்கள்.
படம் உருவானதும் தியேட்டர் உரிமை, இசை உரிமை, சேட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட உரிமைகளில் கிடைக்கும் பணத்தை வைத்து ஃபைனான்சியரிடம் வாங்கிய கடனை அடைத்துவிடுவார்கள். அல்லது படம் வெளியாகட்டும். வசூல் வந்த பின் கொடுக்கிறேன் என சொல்வார் தயாரிப்பாளர்.
ஆனால், அதை பெரும்பாலான ஃபைனான்சியர்கள் ஏற்கமாட்டார்கள். ஏனெனில் படம் சரியாக ஓடவில்லை எனில் தயாரிப்பாளர் நஷ்ட கணக்கை காட்டி 'பணத்தை அப்புறம் தருகிறேன்' என்பார். எனவே, பட ரிலீசுக்கு முன்பே கொடுத்த பணத்தை வாங்கிவிடுவதில்ஃபைனான்சியர்கள் கறாராக இருப்பார்கள்.
தயாரிப்பாளர் பணத்தை கொடுக்கவில்லை எனில் ரிலீசுக்கு முதல் நாள் பஞ்சாயத்து கூட்டி பணத்தை கொடுத்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என செக் வைப்பார்கள். இப்படி பல படங்களுக்கு நடந்திருக்கிறது. அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வார்கள். தற்போது இதுபோன்ற பிரச்சனையில் சூர்யாவின் கங்குவா படமும் சிக்கியிருக்கிறது.
ஞானவேல் ராஜாவின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம்தான் கங்குவா. இந்த படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில்தான், ஞானவேல் ராஜா தங்களிடம் வாங்கிய 55 கோடி கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதுவரை படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு நவம்பர் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை ஒத்தி வைக்கவும் செய்ய முடியாது. கண்டிப்பாக ஞானவேல் ராஜா பணம் கொடுத்தே ஆக வேண்டும். ஞானவேல் ராஜாவின் கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் கங்குவா படத்தில் 300 கோடியை முதலீடு செய்திருக்கிறது. எனவே, இந்த வழக்கு கங்குவா ரிலீஸில் சிக்கலை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
கங்குவா பட புரமோஷன்களில் இப்படம் 1000 கோடியை வசூலிக்கும் என சொல்லியிருந்தார் ஞானவேல் ராஜா. ஆனால், 55 கோடி கொடுத்தால் மட்டுமே கங்குவா படம் ரிலீஸாகு நிலை ஏற்பட்டிக்கிறது.