அப்பாவை தொடர்ந்து மகன் படமும் அம்பேல்!.. சனிக்கிழமை ஒருத்தரும் அந்த ‘பீனிக்ஸை’ சீண்டலையாம்?..
டூரிஸ்ட் ஃபேமிலி போல இந்த வாரம் பல நல்ல படங்கள் வந்திருக்கு தியேட்டருக்கு வந்து பாருங்க என பல விமர்சகர்கள் பாசிட்டிவாக விமர்சனங்களை கொடுத்தாலும், கையில் பத்து பைசா இல்லைப்பா என ரசிகர்கள் இந்த வாரம் வெளியான படங்களை பார்க்க பெரிதாக ஆர்வம் காட்டவே இல்லை என்பது தான் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் என்கின்றனர்.
சிலர் நாங்க கூமாப்பட்டிக்கு போனாலும் போவோமே தவிர 2 மணி நேரம் தலைவலியை உண்டு பண்ணிவிடும் படங்களை பார்க்க விரும்பவே இல்லை என இன்னொரு பக்கம் ஒவ்வொரு ஹிடன் ஸ்பாட்டுகளாக தேடி செல்கின்றனர்.
பிவிஆர், ஐநாக்ஸ், மல்டிபிளக்ஸ் என ஏசி தியேட்டர்கள் போட்டு வைத்து 500 ரூபாய் பாப்கார்ன், 350 ரூபாய்க்கு பானிப்பூரி என ஸ்நாக்ஸில் கொள்ளை லாபம் பார்த்து வந்த தியேட்டர் நிலைமைகள் எல்லாம் விஜய், அஜித், ரஜினிகாந்த் படங்கள் வராத நிலையில், ரொம்பவே டல் அடித்துக் காணப்படுகின்றன.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படங்களிலேயே மகாராஜா படம் மட்டுமே வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது. அதற்கு முழு காரணமே இயக்குனர் நித்திலன் சாமிநாதன் தான் என்கின்றனர். சமீபத்தில் வெளியான ஏஸ் திரைப்படம் எந்தளவுக்கு ரசிகர்களை இம்சை பண்ணியதோ அதை விட மோசமாக அவரது மகன் சூர்யா சேதுபதி நடித்த பீனிக்ஸ் படம் ரசிகர்களை வச்சு செய்த நிலையில், முதல் நாளே அந்த பக்கம் பலரும் போகாத நிலையில், சனிக்கிழமையான இன்றும் ஒரு ஈ, காக்கா கூட வரலை என்கின்றனர்.
முதல் நாளிலேயே அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வசூல் வந்த நிலையில், சனிக்கிழமையான இன்று இதுவரை இரவு காட்சிகளுக்கு புக்கான டிக்கெட்டுகளுடன் சேர்த்து 5 லட்சம் அளவுக்குத்தான் வசூல் வந்திருக்கும் என்கின்றனர். ஞாயிற்றுக்கிழமையான நாளை கொஞ்சமாவது மக்கள் கூட்டம் தியேட்டர்களுக்கு வந்து படத்தை பார்த்தால் தான் பீனிக்ஸ் வீழான் விழாமல் பறக்கும் என்கின்றனர்.