கோயிலுக்கு வந்த இடத்துல! ரசிகர்களின் செயலால் டென்ஷனான சூர்யா

suriya
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. அவர் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ரெட்ரோ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதற்கு முன்னதாக வெளியான கங்குவா திரைப்படம் பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்தது.
அடுத்தடுத்து இரண்டு பெரிய தோல்விகளை கண்ட சூர்யா எப்படியாவது ஒரு வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கிறார். அது மட்டுமல்ல அந்த இரு படங்களின் தோல்வி அவருடைய குடும்பத்தையும் வெகுவாக பாதித்தது. ஏனெனில் சமூக வலைதளங்களில் சூர்யாவை பற்றியும் அவர் கதை தேர்ந்தெடுக்கும் விதத்தை பற்றியும் ஜோதிகா வெளியிடும் கருத்துக்கள் பற்றியும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்த வண்ணம் இருந்தனர்.
ஆனால் இதையெல்லாம் தாண்டி மாணவ மாணவியர்களுக்கு சூர்யாவின் குடும்பம் செய்து வரும் உதவியை யாரும் நினைத்துக் கூட பார்ப்பதில்லை. அதைப் பற்றி சூர்யாவும் பெரிய அளவில் எண்ணுவதில்லை. தன்னை பற்றி எந்த ஒரு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் அதை தன் காதுகளுக்கு எடுத்துச் செல்லாமல் தன்னுடைய நோக்கம் என்ன, அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்ற வழியை நோக்கி தான் பயணித்து வருகிறார் .
சமீபத்தில் கூட அவருடைய அகரம் அறக்கட்டளை தொடங்கி 15 வருடங்கள் நிறைவானதை ஒட்டி ஒரு பெரிய விழாவை எடுத்து கொண்டாடினார் சூர்யா. அந்த விழாவிற்கு திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். முக்கியமாக கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதுமட்டுமல்ல அந்த அறக்கட்டளை மூலமாக பயன் பெற்றவர்கள் அனைவரும் இன்று உயர் பதவிகளில் வகித்து வருகின்றனர்.

suriya_jyothika
அவர்களும் அந்த விழாவிற்கு வந்து அகரம் பற்றியும் அதை நடத்தி வரும் சூர்யாவின் நல்ல எண்ணம் பற்றியும் அவரவர் அனுபவங்களை பகிர்ந்து இருந்தனர். இந்த நிலையில் சூர்யா தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் ஆகியோருடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். அப்போது அவர்களை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் போட்டோ எடுக்க முண்டியடித்து வந்தனர். அதில் கடுப்பான சூர்யா, போதும் நிறைய எடுத்தாச்சு. ஃபேமிலியை எடுக்க வேண்டாம். போதும் போதும் போதும் என்று சொல்லிக் கொண்டே போனார். அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது.