சூர்யாவை தூக்கிய லோகேஷ்… இரும்பு கை மாயாவி படத்தில் அந்த சூப்பர்ஸ்டாரா? மாஸா இருக்குமே!
Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் கனவு திரைப்படமான இரும்பு கை மாயாவி படத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் முக்கிய இடம் லோகேஷ் கனகராஜுக்கு உண்டு. அவர் இயக்கத்தில் இதுவரை வெளியான எல்லா திரைப்படங்களுமே சூப்பர்ஹிட் அடித்தது. அதிலும் அவர் படத்தில் ஹீரோக்களை போல வலுவான வில்லன்களே படத்திற்கு பலமாக அமைந்தது.
கார்த்தி நடிப்பில் கைதி, கமல்ஹாசன் நடித்தது விக்ரம், விஜய் நடிப்பில் மாஸ்டர் மற்றும் லியோ தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கைதி இரண்டாம் பாகத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கசிந்தது.
இருந்தும், அவருக்கு கனவு திரைப்படமாக இருப்பது இரும்புக்கை மாயாவி தானாம். முதலில் படத்தை லோகேஷ் சூர்யாவுக்காவுக்கு தான் உருவாக்கி இருந்தார். அப்படத்தின் ஒரு பகுதியாக தான் மாஸ்டர் திரைப்படத்தில் பவானி கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.
தற்போது லோகேஷ் இரும்பு கை மாயாவி திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறாராம். ஆனால் இந்த முறை சூர்யாவை எடுக்காமல் அந்த கேரக்டருக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானை தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அமீர்கான் நடிக்க இருப்பதால் இப்படம் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் ஃபேன் இந்தியா திரைப்படமாக உருவாக வாய்ப்பு இருக்கிறது. பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.