வணங்கான் படத்துல அருண்விஜய்... அவருக்கிட்ட சூர்யா அப்படியா சொன்னாரு..?
வணங்கான் படம் பாலா இயக்கத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. இந்தப் படத்தின்போது இருவருக்கும் இடையே வந்த சில மனஸ்தாபம்தான் சூர்யாவை படத்தில் இருந்து விலக வைத்தது என்கிறார்கள். ஒருசிலர் படத்தில் நாலு நாளா சூர்யாவை ஓட விட்டுக்கொண்டே இருந்தார். அதனால் தான் அவர் நடிக்கவில்லை என்கிறார்கள்.
அதே நேரம் படத்திற்காக சூர்யா போட்ட கோடிக்கணக்கான தொகையை அவர் பாலாவிற்காகத் திரும்ப கேட்கவில்லையாம். ஏன்னா அவர்தான் சூர்யாவிற்கு நந்தா என்ற பெரிய சூப்பர்ஹிட் படத்தைக் கொடுத்துத் தூக்கி விட்டார். அதனால்தான் பாலாவிடம் அதுபற்றி கருத்து எதுவும் கேட்கவில்லையாம்.
சமீபத்தில் வணங்கான் இசை வெளியீட்டு விழாவில் நடந்த சம்பவத்தை மனதில் வைத்துக்கொள்ளாமல் கலந்து கொண்டார். அப்போது பாலாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு பரஸ்பரம் நட்பைப் பகிர்ந்து கொண்டார். அதேபோல பாலாவோ இந்தப் படத்தில் சூர்யா கலந்து கொள்ளாததற்கான தகவலையும் தெரிவித்துள்ளார்.
அவர் என்ன சொல்றாருன்னா இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் மக்கள் கூடும் இடங்களில் படமாக்கப்பட வேண்டி இருந்தது. அதுபோன்ற காட்சிகளில் சூர்யா நடித்தால் செட்டாகாது. அதனால் தான் அவர் விலகினார். அருண்விஜயை நடிக்க வைத்தோம் என்றும் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் தற்போது படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க. அருண்விஜய்க்கு பாலா சார் இயக்கத்துல நடிக்கணும்னு ரொம்ப நாள் கனவு. அது வணங்கான் மூலமா நடந்தது. அவருக்கு ரொம்ப சந்தோஷம்.
இந்தப் படத்துல நடிக்க வரதுக்கு முன்னாடி சூர்யா சார் கிட்ட சொல்லிட்டு தான் அருண் விஜய் நடிக்க வந்தாரு. சூர்யா சாரும் நல்லபடியா படத்தை பண்ணுங்கன்னு சொல்லி இருக்கார் என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
பாலாவின் இயக்கத்தில் வரும் படம் என்பதாலும், அருண்விஜய் இவரது இயக்கத்தில் முதல்முதலாக நடிப்பதாலும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தில் அருண்விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வரும் 10ம் தேதி பொங்கல் தினத்தையொட்டி திரைக்கு வருகிறது.