ஹிட்டான படத்துக்கு ஃப்ரீ ரைட்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்... சிலிர்த்து போன சூப்பர்ஸ்டார்
Khakka Khakka: தமிழில் சூப்பர் ஹிட் அடித்த காக்க காக்க திரைப்படத்தின் ரைட்சுக்கு காசு வாங்காமல் தயாரிப்பாளர் செய்த சுவாரசியமான விஷயம் தற்போது வெளியாகி இருக்கிறது.
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்து திரைப்படம் காக்க காக்க. இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார். படம் வெளியாகி தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி படமாக அமைந்தது.
பொதுவாக இப்படி சூப்பர் ஹிட் அடிக்கும் ஒரு மாநிலத்தின் படத்தை இன்னொரு மொழிகளில் ரீமேக் செய்ய குறிப்பிட்ட படத்தின் தயாரிப்பாளர் உரிமை கொடுக்க வேண்டும். அப்படி காக்க காக்க படத்தின் ரைட்ஸ் வாங்க அந்த நேரத்தில் வளர்ந்து வந்த நடிகர் சுதீப் முடிவு எடுத்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து நேரடியாக தயாரிப்பாளர் தாணுவை சென்று பார்க்கலாம் என முடிவெடுத்தாராம். இந்த நேரத்தில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மாநில பிரச்சினை வேறு நடந்து இருக்கிறது. பெரிய அளவில் திட்ட மாட்டார் என்று தைரியத்தில் நேரடியாக அவரை பார்க்க சென்று இருக்கிறார்.
அந்த நேரத்தில் தாணு யாரிடமும் கோபமாக பேசிக் கொண்டிருந்தாராம். தயக்கத்துடன் சென்ற சுதீப்பை மரியாதையாக அழைத்து அமர வைத்து என்ன விஷயம் எனக் கேட்டாராம்.
தான் இப்படி காக்க காக்க திரைப்படத்தினை கன்னடாவில் எடுக்கலாம் என முடிவு எடுத்திருப்பதாக சுதீப் கூற தாராளமாக எடுத்துக்கோங்க. எவ்வளவு தருவீங்க என கேட்டாராம்.
ஆனால் அந்த நேரத்தில் வளர்ந்து வந்த சுதீப் இதற்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாற, தாணுவே தனக்கு ஏதும் வேண்டாம் எனக் கூறி உடனே உரிமைக்கான கடிதத்தை எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்தாராம்.
சூப்பர் ஹிட் ஆன திரைப்படத்தில் வருமானம் பார்க்காமல் தாணு செய்த விஷயம் சுதீப்பை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
இருந்தும், சில காரணங்களால் சுதீப்பால் அந்த படத்தை செய்ய முடியவில்லை என்றாலும் ஒரு சூப்பர் ஹிட் படத்தின் ரைட்சை காசில்லாமல் கொடுத்ததை தன்னால் என்றுமே மறக்க முடியாது எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.