விடாமல் துரத்தும் போலீஸ்!.. அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் சிக்கல்!.. அட போங்கப்பா!...
Allu arjun: தெலுங்கு பட நடிகர் அல்லு அர்ஜூனின் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியானது. அப்போது ஹைதராபாத்தில் ஒர் தியேட்டரில் சிறப்பு காட்சியை பார்க்க அல்லு அர்ஜூன் அங்கு சென்றபோது கூட்ட நெரிசலில் ஒரு பெண்ணும், அவரின் மகனும் சிக்கினர். இதில், அந்த பெண் உயிரிழந்தார்.
எனவே, தெலுங்கானா போலீசார் ராம்சரண் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைதும் செய்தனர். கைது சென்ற இரவே அவருக்கு பெயில் கிடைத்தும் அவரை சிறையில் ஒரு நாள் இரவு வைத்துவிட்டு காலையில் விடுதலை செய்தனர். அதோடு, தெலுங்கானா முதல்வர் அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான புகார்களை சட்டசபையில் சொன்னார்.
அல்லு அர்ஜூனை தியேட்டருக்கு வர வேண்டாம் என போலீஸ் சொல்லியும் அவர் கேட்கவில்லை. ஒரு பெண் இறந்துவிட்டார். சிலர் காயமடைந்துவிட்டனர் என போலீசார் சொல்லியும் ‘நான் படம் பார்த்துவிட்டுதான் போவேன்’ என சொல்லி அர்ஜூன் தியேட்டரிலேயே இருந்தார். உங்களை கைது செய்வோம் என போலீஸ் சொன்ன பின்னரே அல்லு அர்ஜூன் வெளியே வந்தார். அப்படி வந்த பின்னரும் ரசிகர்களை பார்த்து கையசைத்து ரோட் ஷோ நடத்தினார்.
அல்லு அர்ஜூனுக்கு என்ன ஆகிவிட்டது என நடிகர்கள் அவரை துக்கம் விசாரிக்க போனார்கள்|?. அவருக்கு என்ன கண், கால், கிட்னி போய்விட்டதா?.. தியேட்டரில் இறந்துபோன பெண், கோமாவில் இருக்கும் அவரின் மகன் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை’ என காட்டமாக பேசினார். மேலும், நான் இருக்கும் வரை தெலுங்கானாவில் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை எனவும் கூறினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அல்லு அர்ஜூன் ‘என் மீது அபாண்டமாக குற்றம் சொல்கிறார்கள். ரசிகர்களை அமைதிப்படுத்தவே கைகளை காட்டினேன். அதை கூட ரசிகர்களை பார்த்து நான் செய்யவில்லை என்றால் மரியாதையாக இருக்குமா?. 20 வருடங்களாக நான் சேர்த்து வைத்த மரியாதையை கெடுக்க நினைக்கிறார்கள். என்னை கெட்டவன் போலவும், மனசாட்சி இல்லாதவன் போலவும் சித்தரிக்காதீர்கள். வறுத்தமாக இருக்கிறது’ என ஃபீல் பண்ணி பேசியிருந்தார்.
மேலும், சிலர் அல்லு அர்ஜூன் வீட்டில் நுழைந்து தாக்குதலும் நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தார்கள். இந்நிலையில், அல்லு அர்ஜூனுக்கு மீண்டும் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது தெலுங்கானா போலீஸ். நாளை (டிச.24) காலை 11 மணிக்கு சிக்கப்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, தியேட்டரில் என்ன நடந்தது என அல்லு அர்ஜுனிடம் போலீசார் விசாரணை செய்யவிருக்கிறார்கள்.