விஜய் முகத்தை பச்சை குத்திய தாடி பாலாஜிக்கு தவெக கொடுத்த அதிர்ச்சி… தேவையா?
Thaadi Balaji: பிரபல நடிகர் தாடி பாலாஜிக்கு இன்று நடந்த தமிழக வெற்றி கழகம் மாநாட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியை கட்சி கொடுத்து இருப்பது ரசிகர்களுக்கே ஷாக்கை கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்தவர் நடிகர் விஜய். ஒரு கட்டத்தில் அவர் அரசியலுக்கு வரப்போகிறார் என கிசுகிசுக்கள் பரவியது. அதற்கு ஏற்ப கடந்த ஆண்டு அவர் தன்னுடைய கட்சியை தமிழக வெற்றிக் கழகம் என அறிவித்தார்.
அதை தொடர்ந்து கொடி அறிமுகம், விக்கிரவாண்டியில் நடந்த மிகப்பெரிய மாநில மாநாடு என அக்கட்சி ரசிகர்களிடம் தொடர்ந்து ஆச்சரியமான விஷயங்களை செய்து வந்தது. அது மட்டுமல்லாமல் அரசியல் தலைவராக விஜய் அவ்வப்போது தன்னுடைய கருத்தையும் முன்வைத்து வந்தார்.
இந்த கட்சி தொடங்கி ஒரு வருடம் முடிந்து இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இதற்கான ஆண்டுவிழா பூஞ்சேரியில் இன்று மிகப் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு 2500 பேருக்கு மட்டுமே முதலில் அனுமதி கொடுக்கப்பட்டது. அவர்களுக்கான பாஸும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் தாடி பாலாஜி கலந்துகொள்ள வந்த போது அவரை உள்ளே செல்ல விடாமல் அங்கிருந்த பவுன்சர்கள் தடுத்து விட்டதாக கூறப்படுகிறது. அவரின் வெளியிலேயே 15 நிமிடம் நிற்க வைத்துவிட்டு பின்னர் மேல் இடத்திலிருந்து வந்த உத்தரவின் பெயரில் அவர் உள்ளே அனுப்பப்பட்டாராம்.
விஜய் கட்சி தொடங்கிய பின்னர் அவருடைய முகத்தை தன்னுடைய மார்பில் பச்சை குத்திக்கொண்டு வைரல் ஆக்கினார் தாடி பாலாஜி. பின்னர் ஆதவ் அர்ஜூனா கட்சியில் இணைந்த போது அவருக்கு பதவி கொடுக்கப்பட்ட போது தாடி பாலாஜியின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைரலானது.
அவளோ புது பாய் பிரண்டோட சந்தோஷமாக இருக்கிறாள் என குறிப்பிட்டு ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸு ஆனந்த் இருக்கும் படமும், தற்குறி நான் அவள் நினைவுகளுடன் என தாடி பாலாஜி பச்சை குத்திய புகைப்படமும் இணைக்கப்பட்டு இருந்தது. ஆனால் பின்னர் தாடி பாலாஜி மன வருத்தமெல்லாம் இல்லை எனக் குறிப்பிட்டு இருந்தார்.