விஜய் போடும் ஸ்கெட்ச்!.. விறுவிறுப்பா வேலை பாக்கும் வினோத்!.. தளபதி 69 பரபர அப்டேட்!...
Thalapathy 69: கோட் படத்திற்கு பின் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவரின் 69வது திரைப்படமாகும். விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்துவிட்ட நிலையில் இது அவரின் கடைசிப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஆனால், தேர்தல் ரிசல்ட்டுக்கு பின் விஜய் அரசியலுக்கு வருவார் என்றும் சிலர் சொல்கிறார்கள். விஜயின் மனதில் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. நடிகர் கமல்ஹாசனும் அரசியலுக்கு வந்தபோது இப்படித்தான் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என சொன்னார்.
ஆனால், அரசியல் சூழ்நிலை அவருக்கு சாதகமாக இல்லை என்பது தெரிந்ததும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். ஆனால், விஜயோ பின் வாங்க மாட்டேன் என சொல்லி இருக்கிறார். கோட் படம் முடிந்ததும் இந்த படத்தில் நடிக்க துவங்கினார் விஜய். இந்த படத்தை 2025 அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
எனவே, படப்பிடிப்பை மெதுவாக நடத்துங்கள். ஒன்றும் அவசரமில்லை என சொல்லி இருந்தார். எனவே, படப்பிடிப்பு மெதுவாகவே நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்போ வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு சென்னை பைய்யனூரில் உள்ள பெப்சி ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இப்போது நடந்து வந்த படப்பிடிப்பு இன்றோடு முடிவடைந்திருக்கிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜனவரி 1ம் தேதி துவங்கவுள்ளது. அதன்பின் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து 45 நாட்கள் FESFI ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.
அதோடு, படத்தின் முழுப்படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது. அப்படிப் பார்த்தால் பிப்ரவரி மாதத்தோடு இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும். அதன்பின் விஜய் அரசியல் தொடர்பான பணிகளிலும் ஈடுபடவிருக்கிறாராம். 2026 சட்டமன்ற தேர்தலை விஜய் குறி வைத்திருக்கிறார். எனவே, 2025 பிப்ரவரி மாதத்திற்கு பின் விஜயை முழுநேர அரசியல்வாதியாக மக்கள் பார்ப்பார்கள் என்றே நம்பலாம்.