கேம் சேஞ்சர் படத்தை முடக்க நடந்த சதி!.. கைகாச செலவு பண்ணி பெரிய தலைகள் பார்த்த வேலை..!
Game Changer: சங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ஜெயராம், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 10ஆம் தேதி வெளியானது. பேன் இந்தியா திரைப்படமாக வெளியான நிலையில் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது.
படம் வெளியாகி 3 நாட்களான நிலையிலும் பெரியளவு வரவேற்பை பெறாமல் இருந்து வருகின்றது. இந்தியன் 2 திரைப்படத்திற்கு எந்த அளவு விமர்சனங்கள் வந்ததோ அதே அளவுக்கு கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கும் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் சங்கர்.
மேலும் வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக தில் ராஜு இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். படம் தற்போது வரை பெரியளவு வசூலை பெறாமல் இருந்து வருகின்றது. இந்நிலையில் இந்த திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்ததற்கு பின்னால் ஒரு பெரிய சதி நடந்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
கேம் சேஞ்சர் திரைப்படம் திரைப்படம் தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வருவதால் படம் வெளியிட்டுருக்கு பிறகும் சங்கர் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகின்றார். அதில் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதிலும் இந்த திரைப்படம் பைனல் காட்சி மட்டும் மொத்தம் ஐந்து மணி நேரம் வந்திருந்தது. அதில் பல காட்சிகள் கட் செய்யப்பட்டு பின்னர் இரண்டரை மணி நேரத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.
கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு ஒரு அநீதி நடந்திருக்கின்றது. அதாவது தமிழகத்தில் இந்த திரைப்படம் ஒரு ஆவரேஜ் படமாக அமைந்தது. ஆனால் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. முதலில் இந்த திரைப்படத்திற்கு தெலுங்கில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தது.
இதில் ஒரு முக்கிய தகவலாக ராம்சரண் ரசிகர்கள் ஒரு பக்கம் பாசிட்டி விமர்சனங்களை கொடுத்து வந்தாலும் அவர்களுக்கு எதிராக ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் மற்றும் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இணைந்து நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி வந்திருக்கிறார்கள். தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் தனித்தனியாக அதாவது எதிர் எதிர் துருவங்களாக செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புவதற்காக கிட்டத்தட்ட இரண்டு முதல் மூன்று கோடி ரூபாய் செலவு செய்து இன்புளுயன்சர் மற்றும் பிஆர் டீம் போன்றவற்றை வைத்து ரிலீசுக்கு முன்னதாகவே இது போன்ற வேலைகளை எல்லாம் செய்து வந்திருக்கிறார்களாம். இது ஒரு கொடுமை என்றால் மற்றொரு கொடுமை அரங்கேறி இருக்கின்றது.
அதாவது படம் ரிலீசுக்கு முன்னதாகவே கேம் சேஞ்சர் திரைப்படத்தின் எச்டி பிரிண்ட் லீக் ஆகி இருக்கின்றது. இதனை கையில் வைத்துக்கொண்டு ஒரு சில நபர்கள் தில் ராஜு அவர்களுக்கு அனுப்பி பணம் கேட்டு வேறு மிரட்டி இருக்கிறார்களாம். இதுபோன்று பல்வேறு சதி இந்த திரைப்படத்திற்கு எதிராக நடந்திருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.