அந்த ஹீரோவுடன் கை கோர்க்கும் தியாகராஜன் குமாரராஜா!.. காம்பினேஷன் செமயா இருக்கே!...
Thiyagarajan kumararaja: சினிமாவில் சில இயக்குனர்கள் இருப்பார்கள். எங்கிருந்தோ வருவார்கள். அவர்களின் முதல் படமே அதிர வைக்கும். யார் இந்த இயக்குனர்? என சக இயக்குனர்களையே ஆச்சர்யப்பட வைப்பார்கள். அதன்பின் பல வருடங்கள் காணாமல் போய்விடுவார்கள். தொடர்ந்து படங்களை இயக்க மாட்டார்கள்.
5 அல்லது 10 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு படம் இயக்குவார்கள். அழுத்தத்தின் பெயரில் சினிமாவை இயக்க மாட்டார்கள். ஒரு நல்ல கதை தோன்றும் வரைக்கும் காத்திருப்பார்கள். எழுதுவார்கள். 'இவர் எப்படா அடுத்த படம் இயக்குவார்?' என ரசிகர்களை காத்திருக்க வைப்பார்கள்.
5 வருடங்களுக்கு ஒரு படம் கொடுத்தாலும் அந்த படம் விருதுகளை பெறும். அப்படி ஒரு இயக்குனர்தான் தியாகராஜன் குமாரராஜா. சிறு வயது முதலே தனக்கு என்ன பிடிக்குமோ அதை மட்டுமே செய்வார். சென்னை லயோலா கல்லூரியில் விஸ்வல் கம்யூனிகேஷன் படித்தார். பாதியிலேயே படிப்பை விட்டார். சில விளம்பர படங்களில் வேலை செய்தார். தமிழகத்தில் உள்ள கோவில்கள் தொடர்பாக சில ஆவண திரைப்படங்களையும் இவர் எடுத்திருக்கிறார். புத்தகம் அதிகம் வாசிக்கும் பழக்கம் கொண்டவர்.
இவர் இயக்கிய முதல் திரைப்படம் ஆரண்ய காண்டம். இந்த படத்தை ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர்களே பாராட்டி இருந்தனர். இது ஒரு கேங்ஸ்டர் கதை. இந்த படம் வெளியாகி 8 வருடங்கள் கழித்து அவர் இயக்கிய படம்தான் சூப்பர் டீலக்ஸ். 2019ம் வருடம் வெளியான இந்த படத்தை அவரே தயாரித்தார்.
இந்த படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு தேசிய விருதும் கிடைத்தது. மேலும், ரம்யா கிருஷ்ணன், பஹத் பாசில், சமந்தா, இயக்குனர் மிஷ்கின் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படமும் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றது. அதன்பின் 4 வருடங்கள் கழித்து கடந்த வருடம் மாடர்ன் லவ் எனும் ஆந்தாலஜி படத்தில் ஒரு எபிசோட்டை இவர் இயக்கியிருந்தார்.
இந்நிலையில், குட் நைட் பட புகழ் மணிகண்டனை வைத்து ஒரு படத்தை இயக்க தியாகராஜன் குமாரராஜா திட்டமிட்டிருக்கிறாராம். விரைவில் இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.